வந்தவாசி.ஜனவரி.25., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்று (25.01.2020) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்... இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களும், அறிவார்ந்த சமூகமும் போராடுகின்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்ட குடியரசுத் தலைவரின் கையால் கல்லூரியில் படித்த பட்டத்தைப் பெற விரும்பவில்லை என்று புறக்கணித்த ஆய்வு மாணவர்கள் சகோதரர் அருண்குமாரும், சகோதரி கிருத்திகாவும் இஸ்லாமியர்களா என்று கேள்வி எழுப்பினார். இதே போல், மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி அவர்கள் மேடையில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு குடியுரிமை திருத்த சட்ட நகலை
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
மஜக குவைத் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.!
குவைத்.ஜனவரி.25.., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக 71-ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை மண்டலச் செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வின் துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணைச் செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைக்க மண்டல துணைச் செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர், குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை
எங்கள் தாய் மண்ணைவிட்டு நாங்கள் எங்கேயும் செல்ல மாட்டோம்!! மோடியும்அமித்ஷாவும் கைலாசா செல்லலாம்!! எஸ்எஸ்ஹாருண்ரஷீது எழுச்சியுரை!!
ஜன.25., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது இந்தியா எங்களின் தாய்மண் எங்களுக்கு குடியுரிமை தருகிறோம் வாருங்கள் என அரபு நாடுகள் அழைத்தாலும் செல்லமாட்டோம் ஏனெனில் அங்கு மன்னர் ஆட்சியின் கீழ் இருப்பதை விட எங்கள் இந்து சகோதரர்களும் கிறிஸ்தவ சகோதரர்களும் மாமன் மச்சான்கள் போல் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை மட்டுமே நேசிக்கிறோம் இருபோதும் இம்மண்ணை விட்டு செல்லமாட்டோம் எங்களை பிரிக்க நினைக்கும் மோடியும், அமித்ஷாவும், வேண்டுமானால் கைலாசா நாட்டிற்கு செல்லலாம் என பேசினார். இந்நிகழ்வில் YMJ தலைவர் அல்தாபி, மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர். மஜக சார்பில் மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி, அம்ஜத் மீரான், தேவாரம், அபுதாஹிர், ஷாஜகான், இக்ராம்,
பொள்ளாச்சியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்! ஷமீம்அகமதுகண்டனஉரை
ஜன.24., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது இந்நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது எனவும் தன்னுடைய ஆட்சியின் இயலாமையை மறைக்க தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி வருவதாகவும் அதை இந்தியர்களாய் நாம் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் KM.சரீப், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஷானவாஸ்கான், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் நகர, ஒன்றிய, வார்டு, நிர்வாகிகள்
பொய் வழக்கு போடும் காவல்துறைக்கு மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!
சென்னை அயனாவரத்தில் கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... 'இந்த போராட்டங்கள் மக்கள் கரங்களுக்கு போய் விட்டது. இதில் கட்சி கொடிகளை, இயக்க பேதங்களை மறந்து பங்கேற்கிறார்கள். போராட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கிறது. மக்கள் மூவர்ண தேசிய கொடிகளை ஏந்தி அணிவகுக்கிறார்கள். இது வரலாறு காணாத எழுச்சியாகும். இது சிலருக்கு பொறுக்கவில்லை. எனவே தேசிய கொடிகளை தூக்குவோர் மீது தேசிய கொடிகளை அவமதித்ததாக வழக்கு போடுகிறார்கள். இது அப்பட்டமான அநீதியான பொய் வழக்குகளாகும். காவல்துறை மனசாட்சி யுடன் செயல்பட வேண்டும். மக்கள் தேசிய கொடிகளை தூக்குவதற்கு சல்யூட் அல்லவா அடித்திருக்க வேண்டும். மாறாக பொய் வழக்கு போடுவதா? இது மேலும் எங்கள் உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் வீறு கொண்டு மேலும், மேலும் எழுவோம்.' இவ்வாறு அவர் பேசினார். இதில், திருச்சி வேலுச்சாமி, ஹைதர் அலி, இயக்குனர் கெளதமன், பச்சை தமிழகம் அருள், த.பெ.தி.க குமரன், வழக்கறிஞர் அஜ்மல்கான் போன்றோர் உரையாற்றினர். மஜக சார்பில் N.A.தைமிய்யா, புதுமடம் அனிஸ், அசாருதீன், சாகுல், பிஸ்மி, அன்வர் உட்பட மஜக வினர் பங்கேற்றனர். மாணவர் இந்தியா சார்பில் பஷீர் அஹ்மது