பொய் வழக்கு போடும் காவல்துறைக்கு மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!


சென்னை அயனாவரத்தில் கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

‘இந்த போராட்டங்கள் மக்கள் கரங்களுக்கு போய் விட்டது. இதில் கட்சி கொடிகளை, இயக்க பேதங்களை மறந்து பங்கேற்கிறார்கள்.

போராட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கிறது. மக்கள் மூவர்ண தேசிய கொடிகளை ஏந்தி அணிவகுக்கிறார்கள்.

இது வரலாறு காணாத எழுச்சியாகும். இது சிலருக்கு பொறுக்கவில்லை.

எனவே தேசிய கொடிகளை தூக்குவோர் மீது தேசிய கொடிகளை அவமதித்ததாக வழக்கு போடுகிறார்கள்.

இது அப்பட்டமான அநீதியான பொய் வழக்குகளாகும். காவல்துறை மனசாட்சி யுடன் செயல்பட வேண்டும்.

மக்கள் தேசிய கொடிகளை தூக்குவதற்கு சல்யூட் அல்லவா அடித்திருக்க வேண்டும். மாறாக பொய் வழக்கு போடுவதா?

இது மேலும் எங்கள் உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் வீறு கொண்டு மேலும், மேலும் எழுவோம்.’

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், திருச்சி வேலுச்சாமி, ஹைதர் அலி, இயக்குனர் கெளதமன், பச்சை தமிழகம் அருள், த.பெ.தி.க குமரன், வழக்கறிஞர் அஜ்மல்கான் போன்றோர் உரையாற்றினர்.

மஜக சார்பில் N.A.தைமிய்யா, புதுமடம் அனிஸ், அசாருதீன், சாகுல், பிஸ்மி, அன்வர் உட்பட மஜக வினர் பங்கேற்றனர்.

மாணவர் இந்தியா சார்பில் பஷீர் அஹ்மது அவர்கள் கலை முழக்கங்களை எழுப்பி மக்களை அதிர வைத்தார்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னைமேற்குமாவட்டம்.