
ஜூலை.15,
கடந்த வாரம் சவூதி தம்மாம் நகரில் மாரடைப்பால் மரணம் அடைந்த மஜக சகோதரர் ஹாஜா இஸ்மாயில் அவர்களின் இல்லத்திற்கு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்றார்.
ஏனங்குடியில் உள்ள அவரின் இல்லத்தில், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பற்றுள்ள ஒரு நிர்வாகியை கட்சி இழந்துள்ளதாக கூறிய அவர், அவர் பிள்ளைகள் மஜக அங்கமாக கருதப்பட்டு அவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட துணைச் செயலாளர் முன்ஷி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணைச் செயலாளர் அன்சாரி, ஆதலையூர், கேதாரிமங்கலம், ஏனங்குடி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.