
கொரோனா நெருக்கடி காரணமாக போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் பேணப்படுகிறது.
நாட்டு நலன் கருதி இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்
ஆனாலும் ஈ-பாஸ் எனும் மின்னனு அனுமதி சீட்டு பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
திருமணம், மரணம், மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், இதர அத்தியாவாசியமான பணிகளுக்கு செல்பவர்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே மின்னனு அனுமதி சீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள், அதிக பட்சமாக ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்றிடும் வகையில் இதன் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
15.07.2020