நாங்களும் ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


சென்னை.ஜனவரி 24,

இன்று மதியம் 2 மணிக்கு சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றது.

தன்னெழுச்சியாக மக்கள் வரும் வழியெங்கும் இணைந்தது பேரெழுச்சியாக இருந்தது.

இதனால் பிராட்வே சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

தொடர்ந்து பாரிமுனை குறளகம் அருகே பெரும் கூட்டம் திரண்டதால் அது ஆர்ப்பாட்ட களமாக மாறியது.

இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசியதாவது…

நாடெங்கும் மக்கள் எழுச்சி பெருகி வருவதால் போராட்டம் தொய்வின்றி அமைதி வழியில் தொடர்கிறது.

மத்திய அரசு திணறுகிறது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், வன்முறை முடிந்த பிறகு இது தொடர்பான வழக்குகளை விசாரிப்போம் என பொறுப்பில்லாமல் சொல்கிறது.

வன்முறை எங்கே நடக்கிறது? ஒரிரு இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அமைதியாகத் தானே போராட்டங்கள் நடக்கிறது. வர வர உச்ச நீதிமன்றத்தின் மீது நமக்கு நம்பிக்கை குறைகிறது. இவர்கள் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மத்திய அரசு பிடிவாதம் காட்டக் கூடாது. மக்கள் உணர்வுகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இதில் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்.

ஜனநாயக சக்திகளாகிய நாங்களும் சொல்கிறோம். இதிலிருந்து மக்களாகிய நாங்களும் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வை துறைமுகம் கூட்டமைப்பு மிக சிறப்போடு ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்கது.

இதில் N.தைமிய்யா, பிஸ்மில்லா கான், அப்பாஸ், உள்ளிட்ட திரளான மஜக-வினரும் கலந்துக் கொண்டு ஆர்ப்பரித்தனர்.

இதில் அபுபக்கர் MLA, இயக்குனர் கெளதமன், பாக்கர், அமீர் ஹம்சா, துறைமுகம் மீரான் உட்பட பல்லாயிரக்கணக்கில் திரண்டனர்.

மாணவர் இந்தியா சார்பில் பஷீர் அஹ்மது அவர்கள் தலைமையிலான குழு, கலை போர் முழக்கங்களை எழுப்பியது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்குமாவட்டம்.
24-01-2020