மஜக கோவை மாவட்ட ஆலோசனை கூட்டம்,மாநிலநிர்வாகிகள்பங்கேற்பு!!


கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர்பாஷா, அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை TA.நாசர், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் KA.பாருக், ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் உரையாற்றினர்.

மேலும் கோவையில் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது அந்த பேரணியை வெற்றியடையச் செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
23.01.2020