சென்னை.மார்ச்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜக-வில் இணைத்துக் கொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த H.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், G.புரோஸ்கான், GK. சமி, I.முஹம்மத் முஸ்தபா, S பிரோஸ் கான், A. செய்யது அலீம் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகி அப்துல் கலாம், புதுப்பேட்டை பஷீர் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 11-03-2020
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
மேலப் பாளையத்தில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணை பொதுச் செயலாளர் JS ரிபாய் ரஷாதி பங்கேற்பு..!
திருநெல்வேலி.மார்ச்.12., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஜார் திடலில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (11-03-2020) இரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி.J.S.ரியாப் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார், மேலப்பாளையம் போராட்டத்தில் 3-வது முறையாக உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.. உடன் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருநெல்வேலி_மாவட்டம் 11-03-2020
மங்கலம் பேட்டை தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச் செயலாளர் நெய் வேலி இப்ராஹிம் கண்டன உரை!
மார்ச் 12, கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், APM சலீம் மற்றும் மங்கலம்பேட்டை நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 11/03/2020
பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!
நாமக்கல்:மார்ச்.12., குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் பல் தேசிய இனத்தை, சிறுபான்மையினரை ஆதிவாசிகளை துண்டாட துடிக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக அரசு சங்பரிவாரங்களை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையும், கலவரத்தையும் தூண்டுகின்ற முயற்சியில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையின் மெத்தனப் போக்கு கலவரகாரர்களுக்கு ஊக்கமளிப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தில் திரளான பெண்களும், ஆண்களும், பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஈரோடு பாபு ஷாகின்ஷா, நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீர், மாவட்ட துணை செயலாளர் மன்சூர் அலி, MJTS செயலாளர் ஜான் பாஷா, மாவட்ட பொருளாளர் மகபூப் பாஷா,சகன் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாமக்கல்_மாவட்டம் 11.03.2020
இன்று MGR இருந்திருந்தால் அவரது குடியுரிமையை பறித்திருப்பார்கள்..! மயிலாப்பூரில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு..!
சென்னை.மார்ச்.12., இன்று சென்னை மயிலாப்பூரில் நடந்த குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது பேசியதாவது.. மத்திய பாஜக அரசு நாட்டின் அன்றாட பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மதவாத பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது. குடியுரிமை கறுப்பு சட்டங்கள் அனைவருக்கும் எதிரானது என்பதை புரிந்த பிறகு போராட்ட களத்திற்கு பல்வேறு தரப்பு மக்களும் வரத் தொடங்கிவிட்டார்கள். CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை.? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறோம். அதற்கு பதிலில்லை. முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் MGR அவர்கள் இன்று இருந்திருந்தால், அவரது குடியுரிமையை இச்சட்டத்தின் கீழ் பறித்திருப்பார்கள். அவர் நமது கிண்டியில் அல்ல... இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார் என்பது நமக்கு தெரியும். நல்லவேலையாக அப்போது இச்சட்டம் வரவில்லை. MGR அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் CAA சட்டத்தில் அவர்களை புறக்கணிக்கிறார்கள். முன்னாள் முதல்வர் சமூகநீதி காத்த வீராங்கனை டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்கள், 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இந்த குடியுரிமை சட்டங்களை