திருநெல்வேலி.மார்ச்.12.,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஜார் திடலில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (11-03-2020) இரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி.J.S.ரியாப் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார்,
மேலப்பாளையம் போராட்டத்தில் 3-வது முறையாக உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..
உடன் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்..
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருநெல்வேலி_மாவட்டம்
11-03-2020