பிப்.03., மத்திய அரசின் பாரபட்ச குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கோவையில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்டமாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாஉசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது Mcom. இந்திய யூனியன் முஸ்லீக் சார்பில் அபுபக்கர் MLA, திமுக சார்பில் கார்த்திக் MLA, காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன், மமக பொருளாளர் உம்மர், உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். உக்கடம் முதல் அவிநாசி சாலை வரை நடைப்பெற்ற இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள், உள்பட ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டனர் மேலும் 670அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி சென்றது அங்கு கூடிய பொதுமக்களுக்கு உற்சாக மூட்டியது நான்கு கிலோ மீட்டர் வரை தொடர்ந்த இப்பேரணி அமைதியான முறையில் சென்று அவிநாசி சாலையில் கண்டன கோஷங்களுடன் நிறைவு செய்யப்பட்டது. இதில் மஜக சார்பில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
எள்ளேரியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! தைமிய்யா பங்கேற்பு..!
கடலூர்.பிப்.03.., மதரீதியாக, இன ரீதியாக, இந்தியாவை பிரிக்கும் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை அடுத்து உள்ள எள்ளெரியில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் ஊராட்சி மன்ற துணை தலைவர் A.M.K.ஹம்ஜா தலைமையில் நேற்று (02-02-2020) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் O.R.ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கியாசுதீன், முஹம்மது ரியாஸ், மாணவர் இந்தியா முஸரப், லால்பேட்டை நகரச் செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி #MJK_IT_WING #கடலூர்_மாவட்டம் 02-02-2020
கறுப்புசட்டங்களுக்கு எதிராக துறைமுகம் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தைமிய்யா பங்கேற்பு..!!
சென்னை.பிப்.02.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கடந்த 31-01-2020 அன்று சென்னை துறைமுக அனைத்து கட்சி, இயக்கங்கள், ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட மஜக மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான மஜகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி #MJK_IT_WING #சென்னை 31-01-2020
நீண்டகால போராட்டத்திற்கு தயாராக வேண்டும் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
தஞ்சை.பிப்.02.., தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் 1500-க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றிய இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... கடந்த ஒன்றரை மாதங்களாக எல்லோரும் போராடி வருகிறோம். ஒரு நாளைக்கு 2, 3. நிகழ்ச்சிகள் என ஒயாது சுற்றி வருகிறோம். தோழர்கள் வேல்முருகன், திருமுருகன் காந்தி, வே.மதிமாறன், சுந்தரவள்ளி, பேரா.மார்க்ஸ், வேலுச்சாமி போன்ற எண்ணற்ற தலைவர்கள் இரவு பகலாக சுற்றி வருகிறார்கள். நிம்மதியாக நம்மால் உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்சி பணிகளில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. ஒரே போராட்டம், பொதுக்கூட்டம் என நாட்கள் நகர்கிறது. ஆனாலும் நாம் சோர்வடையவில்லை. இதற்கு உதாரணம் ஜனவரி-30 அன்று தமிழகத்தில் நடைப்பெற்ற மனிதசங்கிலி போராட்டம் ஆகும். சென்னை முதல் குமரி வரை 950-கி.மீ நீளத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் மனித சுவர் போராட்டமாக மக்கள் எழுச்சியோடு மாறியது. பொதுமக்கள் சாதி, மதம் மறந்து தன்னெழுச்சியாக போராட வருகிறார்கள். ஆனால்
மயிலாடுதுறை_மனிதசங்கிலியில்..!
(30/01/20) நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் நீடூர் ஜெஹபர் அலி, ஆத்தூர் அப்துல் ஜலில், ஹாஜா சலீம், IKP மாவட்ட செயலாளர் கூறைநாடு முனைவர்தீன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் திரளான மஜக வினர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.