நீண்டகால போராட்டத்திற்கு தயாராக வேண்டும் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!


தஞ்சை.பிப்.02..,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் 1500-க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றிய இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

கடந்த ஒன்றரை மாதங்களாக எல்லோரும் போராடி வருகிறோம். ஒரு நாளைக்கு 2, 3. நிகழ்ச்சிகள் என ஒயாது சுற்றி வருகிறோம்.

தோழர்கள் வேல்முருகன், திருமுருகன் காந்தி, வே.மதிமாறன், சுந்தரவள்ளி, பேரா.மார்க்ஸ், வேலுச்சாமி போன்ற எண்ணற்ற தலைவர்கள் இரவு பகலாக சுற்றி வருகிறார்கள்.

நிம்மதியாக நம்மால் உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்சி பணிகளில் ஈடுபாடு காட்ட முடியவில்லை.

ஒரே போராட்டம், பொதுக்கூட்டம் என நாட்கள் நகர்கிறது.

ஆனாலும் நாம் சோர்வடையவில்லை. இதற்கு உதாரணம் ஜனவரி-30 அன்று தமிழகத்தில் நடைப்பெற்ற மனிதசங்கிலி போராட்டம் ஆகும். சென்னை முதல் குமரி வரை 950-கி.மீ நீளத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் மனித சுவர் போராட்டமாக மக்கள் எழுச்சியோடு மாறியது. பொதுமக்கள் சாதி, மதம் மறந்து தன்னெழுச்சியாக போராட வருகிறார்கள்.

ஆனால் மத்திய அரசு மவுனம் காக்கிறது. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

நாங்கள் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மக்களாகிய நாங்களும் அதேயேத்தான் சொல்கிறோம். நாங்களும் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம். அமைதி வழியில் எமது போராட்டம் தொடரும்.

இந்த போராட்டம் சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு நீடிக்கிறது. இன்னும் ஒரு ஆண்டு கூட நீடிக்கலாம். 2024 வரை கூட நீடிக்கலாம். அதற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் போராடுவது நமது தலைமுறைக்காக என்பதை உணர வேண்டும்.

இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நூற்றாண்டை தாண்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஜனநாயகத்தை, அரசியல் சாசன சட்டத்தை, சமூக நீதியை, வாழ்வுரிமையை காக்க நடைபெறும் அறம் சார்ந்த போராட்டம் இது.

இதை நீண்ட காலம் தொடர்ச்சியாக எடுத்து செல்ல சில நெறிமுறைகள் தேவை.

நிதானம் இழக்காமல், உணர்ச்சிவசப்படாமல் அறிவுசார்ந்த முன்னெடுப்புகள் தேவை.

தவறான, பிறரை காயப்படுத்தும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும். அப்படி பேசுபவர்களை ஊக்கப்படுத்தவும் கூடாது. சர்ச்சைக்குரிய முழக்கங்களை தவிர்த்து கோரிக்கையை வலியுறுத்தும் முழக்கங்களை தொடர வேண்டும். எல்லோரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய தருணம் இது.

https://m.facebook.com/story.php?story_fbid=2251391901627239&id=700424783390633

இங்கே பேருந்து நிலையத்தில் கூட்டம் போட போலிஸ் அனுமதி மறுத்துள்ளது. நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், அவர்களுடன் மோதாமல் இடத்தை மாற்றி நடத்திவிட்டீர்கள். இது தான் புத்திசாலித்தனம்.

சிலர் வன்முறையை, மோதலை எதிர்பார்க்கிறார்கள். அதோடு போராட்டங்களை அவதூறு பரப்பி ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பளித்து விடாமல், கவனமாக போராட்டங்களை தொடர்வோம்.

உரிமைகளை காக்க அமைதி வழியில், அனைவரையும் அரவணைத்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட துனைச் செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகரச் செயலாளர் அப்துல் சமது, நகர துணைச் செயலாளர் அராபத் உள்ளிட்ட மஜக-வினரும் திரளாகபங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#தஞ்சைதெற்குமாவட்டம்
01-02-2020