குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!


பிப்.02,

CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது.

திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகம்மது அவர்கள் தலைமையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் S.O.அபுல் ஹசன் கலாமி அவர்கள் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் A.R சாகுல் ஹமீது தலைமையில், காயல் நகரச் செயலாளர் ஜிப்ரி, பொருளாளர் மீரான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சபீர் ஆகியோரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இதில் ஆர்வமுடன் பொதுமக்களும், பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.