கறுப்புசட்டங்களுக்கு எதிராக துறைமுகம் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தைமிய்யா பங்கேற்பு..!!


சென்னை.பிப்.02..,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கடந்த 31-01-2020 அன்று சென்னை துறைமுக அனைத்து கட்சி, இயக்கங்கள், ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட மஜக மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான மஜகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி
#MJK_IT_WING
#சென்னை
31-01-2020