காவேரி ரயில் மறியல் போராட்டம் சென்னையில் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் தலைமையில் தடையை உடைத்த மஜகவினர்…

image

image

image

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்…

தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பர் என அறிவிக்கப் பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமயில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பீச் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறித்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் அரண் போல் நின்று கொடுத்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்ற போது சற்று பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மண்ணடி ஈத்கா மசூதி அருகிலிருந்து புறப்பட்ட மஜகவினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது  ” உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஜா தலைமையிலான நிபுணர் குழு அளித்த அறிக்கை தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் ஒருதலைப் பட்சமான அறிக்கையாகவே உள்ளது. பாஜக அரசு அமைத்த இக்குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என கூறினார்.

இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன்,  பொருளாளர் ஜாவித், துணைச் செயலாளர் அப்ஸர் மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு