சென்னை அயனாவரத்தில் கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... 'இந்த போராட்டங்கள் மக்கள் கரங்களுக்கு போய் விட்டது. இதில் கட்சி கொடிகளை, இயக்க பேதங்களை மறந்து பங்கேற்கிறார்கள். போராட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கிறது. மக்கள் மூவர்ண தேசிய கொடிகளை ஏந்தி அணிவகுக்கிறார்கள். இது வரலாறு காணாத எழுச்சியாகும். இது சிலருக்கு பொறுக்கவில்லை. எனவே தேசிய கொடிகளை தூக்குவோர் மீது தேசிய கொடிகளை அவமதித்ததாக வழக்கு போடுகிறார்கள். இது அப்பட்டமான அநீதியான பொய் வழக்குகளாகும். காவல்துறை மனசாட்சி யுடன் செயல்பட வேண்டும். மக்கள் தேசிய கொடிகளை தூக்குவதற்கு சல்யூட் அல்லவா அடித்திருக்க வேண்டும். மாறாக பொய் வழக்கு போடுவதா? இது மேலும் எங்கள் உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் வீறு கொண்டு மேலும், மேலும் எழுவோம்.' இவ்வாறு அவர் பேசினார். இதில், திருச்சி வேலுச்சாமி, ஹைதர் அலி, இயக்குனர் கெளதமன், பச்சை தமிழகம் அருள், த.பெ.தி.க குமரன், வழக்கறிஞர் அஜ்மல்கான் போன்றோர் உரையாற்றினர். மஜக சார்பில் N.A.தைமிய்யா, புதுமடம் அனிஸ், அசாருதீன், சாகுல், பிஸ்மி, அன்வர் உட்பட மஜக வினர் பங்கேற்றனர். மாணவர் இந்தியா சார்பில் பஷீர் அஹ்மது
Tag: M.தமிமுன் அன்சாரி
நாங்களும் ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை.ஜனவரி 24, இன்று மதியம் 2 மணிக்கு சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. தன்னெழுச்சியாக மக்கள் வரும் வழியெங்கும் இணைந்தது பேரெழுச்சியாக இருந்தது. இதனால் பிராட்வே சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து பாரிமுனை குறளகம் அருகே பெரும் கூட்டம் திரண்டதால் அது ஆர்ப்பாட்ட களமாக மாறியது. இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசியதாவது... நாடெங்கும் மக்கள் எழுச்சி பெருகி வருவதால் போராட்டம் தொய்வின்றி அமைதி வழியில் தொடர்கிறது. மத்திய அரசு திணறுகிறது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், வன்முறை முடிந்த பிறகு இது தொடர்பான வழக்குகளை விசாரிப்போம் என பொறுப்பில்லாமல் சொல்கிறது. வன்முறை எங்கே நடக்கிறது? ஒரிரு இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அமைதியாகத் தானே போராட்டங்கள் நடக்கிறது. வர வர உச்ச நீதிமன்றத்தின் மீது நமக்கு நம்பிக்கை குறைகிறது. இவர்கள் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மத்திய அரசு பிடிவாதம் காட்டக் கூடாது. மக்கள் உணர்வுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். ஜனநாயக சக்திகளாகிய நாங்களும் சொல்கிறோம். இதிலிருந்து மக்களாகிய
குடியுரிமை திருத்த சட்டத்தால் அஸ்ஸாமில் இலட்சக்கணக்கான இந்துக்கள் பாதிப்பு : முதமிமுன்அன்சாரி_MLAபேச்சு!
தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச் செயலாளர் தாஜ்தீன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு மல்லப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் இரா.அன்பழகனார், அப்துல்ரஹ்மான் Ex.MP, து.கிருஷ்ணசாமி வாண்டையார், தம்பிக்கோட்டை நிலக்கிழார் எம்.கே.எஸ்.செந்தில் குமார், பண்ண வயல் நிலக்கிழார் எஸ்.ராஜா தம்பி சேர்வை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களின் நலன்களுக்காக தான் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை குறிப்பிட்டார். பிறகு, குடியுரிமை கறுப்பு சட்டங்கள் தொடர்பாக பேசியவர். NRC போன்ற சட்டங்களால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கான இந்துக்களின் குடியுரிமை பறிபோய் இருப்பதாக கூறியவர். இது நாடு முழுக்க அமுலானால் எல்லா சமூக மக்களும் பாதிப்படைவார்கள் என்றும், எனவே தான் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார். அதனால் தான் நாள்தோறும் எல்லா சமூக மக்களின் ஆதரவும் பெருகி வருவதாக கூறியவர். நாட்டுக்கு தொழிற்சாலைகள், நல்லகல்வி கூடங்கள், தரமான மருத்துவமனைகள், அகன்ற சாலை போன்றவை தான் தேவை என்றார். இது போன்ற பிரிவினைகளை, குழப்பங்களை ஏற்படுத்தும் சட்டங்கள் தேவையில்லை என்பதே மக்களின் எண்ணமாகும் என்றும் இடித்துரைத்தார். இந்நிகழ்வில், மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன், மஜக
கறுப்புசட்டங்களுக்கு எதிராக மஜக வேலூர் மாவட்டம் சார்பாக எழுச்சிமிகு பொதுக்கூட்டம்..!
வேலூர்.ஜன.12.., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 11-01-2020 மாலை வேலூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே17 ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது, திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இப்பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அவைத்தலைவர் (திமுக) தி.அ.முகமது சகி, மாநில து.செயலாளர் (மஜக) J.M.வசீம் அக்ரம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் (மஜக) S.G.அப்சர் சையத், வேலூர் மாவட்ட தலைவர் டிக்காராமன் (காங்கிரஸ்) சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் வாஹித் பாஷா (காங்கிரஸ்), தமுமுக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹசன், மஸ்தான், மாநில துணைச் செயலாளர் எஸ்,ஏ ஜாபீர் (விசிக), தொகுதி செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன்(விசிக), மாவட்டச் செயலாளர் சான் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
மம்தா பானர்ஜி கூறியதுபோல் ஐநாவில் முறையிட தயங்க மாட்டோம்..! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
கடலூர்.ஜனவரி.5.., இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன மாநாடு நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். இன்று டெல்லியில் JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்தார். நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்கள், நாள் தோறும் வீரியம் பெறுவதாக கூறியவர், அரசப் படைகளாலும், அடக்கு முறைகளாலும் இவற்றை ஒடுக்க முடியாது என்றார். மக்கள் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றவர், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஐ.நா.வின் மேற்பார்வையில் இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். நீதி மறுக்கப்பட்டால் இப்பிரச்சனையை எங்கள் இந்து சமுதாய அறிவுஜீவிகள் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்து செல்வார்கள் என்றும் எச்சரித்தார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பிரம்மாண்ட மக்கள் திரள் கூடி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தொகுதி மக்கள் மட்டுமே இணைந்து இவ்வளவு பெரிய எழுச்சியை திரட்டி உள்ளனர். ஜனநாயக சக்திகள், முற்போக்கு கட்சிகள்,