பிப்.16, நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி மற்றும் விளக்க பொதுக் கூட்டம் நாகை அவுரித் திடலில் அதன் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைப்பெற்றது. இதில், மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று குடியுரிமை சட்டங்களைக் கண்டித்து பேசினார். மேலும், மஜக மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகை அப்துல், மஞ்சை ஷேக் அலி, நாகூர் மஹ்மூது இபுராஹும் உள்ளிட்டோர் தலைமையில் திரளான மஜகவினர் பேரணியில் அணிவகுத்து வந்தனர். இதில் பல்வேறு அமைப்பு, இயக்க, கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் என திரளானோர் பேரணி மற்றும் தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கெடுத்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
தீவிரம்பெறும் வாழ்வுரிமை மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக்கூட்டங்கள்!
பிப்.15, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எதிர்வரும் பிப்.29, அன்று கோவையில் தமிழகம் தழுவிய அளவில் "வாழ்வுரிமை மாநாடு" நடைப்பெற உள்ளது. இலட்சக்கணக்கானோர் திரள உள்ள இம்மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டிற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் மஜக நிர்வாக மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடலூர் வடக்கு, புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. கடலூர் (வ) லால்பேட்டையில் மாவட்டச் செயலாளர் ஜாகீர்ஹூசைன் தலைமையிலும், ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பங்குடியில் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையிலும், கிழக்கு மாவட்டச் செயலாளர் முபாரக் முன்னிலையிலும், திருவாரூரில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், துரை முகம்மது ஆகியோர் பங்கேற்றனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, குவைத் மண்டல பொருளாளர் சதக்கத்துல்லா மற்றும் திருவாரூர், கடலூர்(வ), புதுகை மாவட்ட
வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம்..! முதமிமுன்அன்சாரி MLA கடும் கண்டனம்..!
நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தங்கள் வாழ்வுரிமைகள் குறித்த அச்சத்தில் தவிக்கும் மக்கள் தொடர் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட விரும்பும்போது, அவர்களின் உணர்வுகளை கவனமாக எதிர்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். அமைதி வழியில் மக்கள் தொடர்ச்சியாக போராட ஒரு இடத்தை ஒதுக்கி தாருங்கள் என பல முறை கேட்டும் காவல்துறை அதை செவிமடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டையில் கூடிய மக்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. அது தொடர்பாக வரும் காணொளி காட்சிகளை பார்க்கும் போது, பெண்களை குறிவைத்து தாக்குதல் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது. காவல்துறை தரப்பில் வெளியான முதல் கட்ட செய்திகள் யாவும் தவறானவை என்பதும், இத்தாக்குதல் மூர்க்கத்தனமாக நடைப்பெற்றிருக்கிறது என்பதும் காணொளி காட்சிகள் மூலம் உறுதியாகிறது. தடியடியை கண்ட அதிர்ச்சியில் 70 வயது முதிர்ந்தவர் உயிரிழந்த செய்தி மேலும் வேதனையளிக்கிறது. எனவே தடியடிக்கு உத்தரவிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தடியடியைக் கண்ட அதிர்ச்சியில்
அமைதியாக மக்கள் போராட இடம் ஒதுக்க வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
பிப்.14, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக 'தேசம் காப்போம்' என்னும் தலைப்பில் மத்திய அரசின் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தென்னூர் உழவர் சந்தையில் ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் மௌலவி ஹாஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் தொடர்ச்சியாக போராடுகிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டம் நடத்திட காவல்துறையே இடம் ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அமைதிவழியிலான போராட்டங்களே நீண்ட கால உரிமை போராட்டத்திற்கு உதவும் என்றும், நாம் ஜனநாயக வழியில் அமைதிக்கு இடையூறு இன்றி தொடர்ந்து போராடுவோம் என்றும், இதில் எல்லோரும் கவனமாக இருப்போம் என்றும் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலானா ரூஹூல்ஹக் ஹஜ்ரத், தோழர் வேல்முருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அ.ச.உமர் பாரூக், பேராசிரியர் அருணன், பாதிரியார் ஜெகத்கஸ்பர் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். இதில் திருச்சி மாவட்ட மஜக வின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் மெய்தீன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள்,
இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதித்த அனைத்துக் கட்சிக்கூட்டம்..! மஜக பங்கேற்பு..!
சென்னை.பிப்.13.., மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிச கொள்கையால் நாட்டில் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க திராவிடக் கழகம் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இட ஒதுக்கீடு குறித்து சமீபத்திய தீர்ப்பு குறித்தும், அதனால் ஏற்படும் ஐயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாசிசக் கொள்கை அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், SDPI, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கருத்துக்களை பரிமாறினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 13-02-2020