பிப்.16,
நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி மற்றும் விளக்க பொதுக் கூட்டம் நாகை அவுரித் திடலில் அதன் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில், மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று குடியுரிமை சட்டங்களைக் கண்டித்து பேசினார்.
மேலும், மஜக மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகை அப்துல், மஞ்சை ஷேக் அலி, நாகூர் மஹ்மூது இபுராஹும் உள்ளிட்டோர் தலைமையில் திரளான மஜகவினர் பேரணியில் அணிவகுத்து வந்தனர்.
இதில் பல்வேறு அமைப்பு, இயக்க, கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் என திரளானோர் பேரணி மற்றும் தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கெடுத்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.