MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம் மண்டல செயளாலர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கத்தார் மண்டல மேலிட பொறுப்பாளர் கீழக்கரை முஹம்மது ஹுசைன் மற்றும் ஓமன் மண்டல மேலிட பொறுப்பாளர் உத்தமபாளையம் உவைஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் 13 அன்று நடக்கவிருக்கும் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக நடத்துவது குறித்தும், அதற்கான அழைப்பிதழ் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் அனைவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிப்பேட்டை முஹம்மது ஃபாரூக், மஞ்சக்கொல்லை முஹம்மது ஃபர்மானுல்லாஹ், கடலங்குடி முஹம்மது ஹர்ஃபின், IT WING செயளாலர் கருப்பூர் உபைஸ், சனயா மாநகர செயளாலர் ரியாஸ், மாநகர பொருளாளர் விநாயக மூர்த்தி, மாநகர து.செயளாலர்கள் முத்தலிஃப், முபாரக், ஆசிஃப், கலிஃபா சபரி, அஜிசியா கிளை செயளாலர் ஷாஜகான், கிளை பொருளாளர் ஹுசைன், கிளை து.செயளாலர்கள் ஷாஜகான், சிக்கந்தர் மற்றும் சனயா மாநகர உறுப்பினர்கள் யாசர், அயூப், ஜாபர், ஹனிஃபா, ஹபீப், முஸ்தஃபா, அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பிறகு சனயா மாநகரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சஹர் விருந்தில் மண்டல தலைமை நிர்வாகிகள், சனயா மாநகர நிர்வாகிகள், அஜிசியா கிளை நிர்வாகிகள், நட்பு சொந்தங்கள் தஸ்தகீர் சுலைமான், குரும்பூர் தாஹீர் மற்றும் மனிதநேய கலாச்சார பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.