தீவிரம்பெறும் வாழ்வுரிமை மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக்கூட்டங்கள்!

பிப்.15,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எதிர்வரும் பிப்.29, அன்று கோவையில் தமிழகம் தழுவிய அளவில் “வாழ்வுரிமை மாநாடு” நடைப்பெற உள்ளது.

இலட்சக்கணக்கானோர் திரள உள்ள இம்மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இம்மாநாட்டிற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் மஜக நிர்வாக மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கடலூர் வடக்கு, புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன.

கடலூர் (வ) லால்பேட்டையில் மாவட்டச் செயலாளர் ஜாகீர்ஹூசைன் தலைமையிலும், ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பங்குடியில் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையிலும், கிழக்கு மாவட்டச் செயலாளர் முபாரக் முன்னிலையிலும், திருவாரூரில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும் நடைப்பெற்றது.

இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், துரை முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, குவைத் மண்டல பொருளாளர் சதக்கத்துல்லா மற்றும் திருவாரூர், கடலூர்(வ), புதுகை மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING