
கன்னியாகுமரி.மார்ச்.30.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுரேஷ் ராஜன் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் குமார் (எ) விஜய் வசந்த் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், மாநகர துணை செயலாளர் பைசல்,மாநகர இஸ்லாமிய கலாச்சார பேரவை மாகின், மாநகர மாணவர் இந்தியா செயலாளர் மாஜித்,மாநகர மாணவர் இந்தியா துணை செயலாளர் முஹாஜிர் திரளான மஜக வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திரளானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில்
மஜக-வின் மூவர்ண கொடி அதிகளவில் பட்டொளி வீசி பறந்தது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK2021
#TNElections2021
#கன்னியாகுமரி_மாவட்டம்
30.03.2021