அமைதியாக மக்கள் போராட இடம் ஒதுக்க வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!


பிப்.14,
ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக ‘தேசம் காப்போம்’ என்னும் தலைப்பில் மத்திய அரசின் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தென்னூர் உழவர் சந்தையில் ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் மௌலவி ஹாஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் தொடர்ச்சியாக போராடுகிறார்கள்.

அவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டம் நடத்திட காவல்துறையே இடம் ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அமைதிவழியிலான போராட்டங்களே நீண்ட கால உரிமை போராட்டத்திற்கு உதவும் என்றும், நாம் ஜனநாயக வழியில் அமைதிக்கு இடையூறு இன்றி தொடர்ந்து போராடுவோம் என்றும், இதில் எல்லோரும் கவனமாக இருப்போம் என்றும் கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலானா ரூஹூல்ஹக் ஹஜ்ரத், தோழர் வேல்முருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அ.ச.உமர் பாரூக், பேராசிரியர் அருணன், பாதிரியார் ஜெகத்கஸ்பர் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

இதில் திருச்சி மாவட்ட மஜக வின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் மெய்தீன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.