தூத்துக்குடி ஏப்.06,
மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ‘கபசுர குடிநீர்’ விநியோகத்தைக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் A.R சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக நகரின் சிலபகுதிகளில் சமூக விலகலை கடைபிடித்து விதிமுறைகளை பேணி வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீரை மஜகவினர் சிறுக்குழுக்களாக பிரிந்து விநியோகம் செய்தனர். தொடர்ச்சியாக நகர் முழுவதும் விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், நகர நிர்வாகிகள் ஜிப்ரி, மீரான், இப்னுமாஜா, மொகுதும், ரியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.
06.04.2020