மனிதநேய ஜனநாயக கட்சியின், மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக, H.செய்யது இப்ராஹிம் த/பெ; சாகுல் ஹமீது 8A, வசந்தம் நகர, குனியமத்தூர் கோயம்புத்தூர். 641008 அலைபேசி ; 9944969177 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02-02-2021
Month:
உற்சாகமற்ற ஆளுநர் உரை.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி…!
சென்னை.பிப்.2, இன்று தமிழக சட்டசபைக்கு சென்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கலவரத்தை தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற பதாகையை தூக்கி சென்றார். கவர்னர் உரையாற்றியதை அடுத்து சட்டசபையின் இன்றைய கூட்டம் நிறைவுற்றது. பிறகு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் கவர்னர் உரை குறித்து பேசியதாவது... கவர்னர் உரை கடந்த ஒராண்டின் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பாக இருக்கிறது. சடங்கு - சம்பிரதாயப் பூர்வ உரையாக, உற்சாகமற்ற ஒரு உரையாக இருந்தது என்று கூறினார். பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேரவை மற்றும் தமிழக அமைச்சரவையின் தீர்மானங்களை கவர்னர் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றவர், இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு இதற்கு அழுத்தம் தர வேண்டும் என்றார். மேலும் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலையில் மெளனம் காப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #சட்டப்பேரவை_வளாகம் 02-02-2021
சிவகாசியில் மஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்!
ஜன.31., மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிவகாசி ராயல் மினி மஹாலில், மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகாசி நகர பொறுப்பாளர்கள் முகமது அனிபா, சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சிவகாசி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. பீர்முகம்மது, ராயல் மஹால் நிறுவனர் அகமது ரபீக், ஆகியோர் கலந்துகொண்டு இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ஈ.சி.ஜி. ரத்த அழுத்தம் கண்டறிதல், போன்ற சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப் பட்டது , இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்வின் இறுதியில்ஸ்ரீவி நகர செயலாளர் ஹாஜி.ஷாஜகான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 01.02.2021
கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை அமளிக் காடாக்க சில மதவெறி சக்திகள் திட்டம் தீட்டுகின்றன. தேர்தல் நேரத்தில் இதை தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவும் அவர்கள் எண்ணுகிறார்கள். நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் வலதுசாரி வகுப்புவாதியான கல்யாணராமன் என்பவர் பேசிய கருத்துகள் நேற்று இரவு தமிழகத்தில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியதால், அவர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து இது போன்று பேசியும், எழுதியும் வருகிறார். பல சமயம் காவல்துறைக்கும் சவால் விடுகிறார். காவல்துறை அவர் விஷயத்தில் காட்டும் மென்மையான அணுகுமுறை அவருக்கு அசட்டு துணிச்சலை தந்திருப்பதாக கருதுகிறோம்.. இப்போது மக்களிடம் எழுந்த ஆவேசங்களால் அவர் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது. பிற மதங்களை இழிவுப்படுத்துதல், பிற சமூக தலைவர்களை வம்புக்கிழுத்தல், சமூக ஒற்றுமையை சீர் கெடுத்தல் என்பது போன்ற அவரது அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற வன்முறையை வளர்க்கும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ஒருவர் உணர்வை ஒருவர் மதித்து