திருவாரூர்.மார்ச்.5, முத்துப்பேட்டையில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அனுமதி இன்றி போராடுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியிறுக்கிறது. காவல் துறை இடம் ஒதுக்காததால் தான், தாங்கள் விரும்பும் இடத்தில் மக்கள் அமர்ந்து போராடுகிறார்கள். இங்கு பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? மக்கள் ஓரமாக அமர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை இடம் தந்தால் அதில் அமர்ந்து போராடுவார்கள். அரசுக்கு எதிராக அமைதியாக போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி உள்ளது. கள நிலவரத்தை நீதிபதிகள் யோசிக்க வேண்டாமா? சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன பிறகும், உங்களால் யாரையாவது கைது செய்ய முடிந்ததா? முடியுமா? ஏனெனில் கள நிலவரம் அப்படி உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை, எல்லா மக்களையும் அரவணைத்து அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது வாழ்வுரிமைக்கான போராட்டம். சமரசம் செய்ய மாட்டோம். போராட்டக் குழுவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பேச்சாளர்களை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்துங்கள். முழக்கங்களை சரி பார்த்த பிறகு
Tag: M.தமிமுன் அன்சாரி
வாழ்வுரிமை மாநாடு ஏற்படுத்திய எழுச்சி.. மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA நன்றி கடிதம்..!
ஆருயிர் மனிதநேய சொந்தங்களே.... இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான பணி சுமைகளும் அதை நிறைவேறாமலேயே தடுத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை. சொந்தங்களே.. நமது கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாம் அனைவருமே ஓடியாடி உழைத்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், ஐந்தாம் ஆண்டில் வலிமை மிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறோம். சற்றே திரும்பிபார்க்கின்ற போது, இவற்றையெல்லாம் நாம் எப்படி சமாளித்து கடந்து வந்தோம் என்ற ஆச்சரியங்கள் புருவங்களை உயர்த்த செய்கின்றன. அலைகடலில் போராடி, புயல் வீச்சில் புரண்டு, எதிர் நீச்சல் அடித்து, நெருப்பு வளையங்களை கடந்து நமது பயணம் சாகசங்களாக அமைந்திருக்கிறது. அரசியலின் ஆபத்தான வளைவுகளில் விழுந்து விடாமல், நமக்கான பாதைகளில் பயணித்தவாரே வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் விளைவாக, நமது சட்டமன்ற பணிகளை பாராட்டி மஹாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக குழுமமான புனே அமைதி பல்கலைக்கழகம் "இந்தியாவின் முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்" என்ற விருதை வழங்கிய போது, அது மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த மாணிக்கம்
இந்துக்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பேச்சு…!!
செங்கல்பட்டு., மார்ச்.03, திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்.. கடந்த வாரம் அஸ்ஸாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் குடியுரிமை அதிகரிகளிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம், எங்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய ஆவணங்கள் செல்லாது, என்றும் குடியுரிமை சான்றிதல் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றும் தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் ஜாபிதா பேகம் மற்றொருவரின் பெயர் முனீந்தர
ஐந்தாம் ஆண்டில் மஜக, கோவையை நோக்கி புறப்பட்டு வாரீர்! முதமிமுன்அன்சாரி MLA அழைப்பு!
எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரும் மனிதநேய ஜனநாயக கட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அனைத்து மக்களையும் சமூக நீதி களத்தில் சகோதர - சகோதரிகளாக இணைக்கும் தங்க பாலத்தை கட்டியமைக்கும் மனிதநேய பணிகளை ; நுட்பமாக செய்து வெற்றி கண்டிருப்பதே இதன் நான்காண்டு சாதனைகளில் முதன்மையானதாகும். சந்தர்ப்பவாத பகட்டு அரசியலில் பொழுது போக்காமல், அனல் கக்கும் போராட்ட களங்களில் இதன் தொண்டர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். நமக்கேன் வம்பு? என்று பலரும் கண்டும் காணாமல் போகும் விவகாரங்களில்; துணிந்து களமாடி உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், எல்லோருக்கும் நல்லவர்களாக நடிப்பதை விட சத்தியத்தின் பக்கம் நிற்பதே அறமாகும் என்ற கோட்பாட்டோடு உழைத்தல், தவறுகள் தலைக்காட்டும் இடங்களில் மௌனங்களை பேணாமல் நிசப்தத்தை உடைத்து நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியலுக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அரசியல் சூறாவளிகளில் நிலைக்குலைந்து விடாமல், தவறான முடிவுகளெடுத்து தடுமாறி விடாமல் நேர் கோட்டில் பயணிக்கும் துணிச்சல் இறையருளால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்திருக்கிறது. இதோ.. விழிகளில் லட்சியங்களை சுமந்துக் கொண்டு இதயங்களில் நம்பிக்கைகளை விதைத்துக்
நீதிபதி நீதி பேசக் கூடாதா? திருப்பூர் கூட்டத்தில் மத்தியஅரசுக்கு தமிமுன்அன்சாரி MLA கண்டனம்!
பிப்.28, திருப்பூரில் மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கெதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது: அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை காப்பாற்றுவதற்காக நீண்ட நெடிய போராட்ட களத்தில் நிற்கிறோம். உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதைப் போல் இனி போராடுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். மாதத்தில் சமையலுக்கும், கேஸ், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றிற்கு ஒரு தொகையை ஒதுக்குவது போல் இனி போராட்டத்திற்கும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். ஏனெனில் இப்போராட்டம் இப்பொழுது நிறைவு பெறுவதாக தெரியவில்லை. மத்திய அரசின் பிடிவாதமும், பிரதமரின் ஆணவமும் மாறுவதாக தெரியவில்லை. அகன்ற மார்பு கொண்ட பிரதமரிடம் சின்ன சிறிய இதயமில்லாமல் போய்விட்டது. அவர்கள் போராட்டங்களை புரிந்து கொள்ளவில்லை. பிடிவாதம் பிடிக்கிறார்கள். https://m.facebook.com/story.php?story_fbid=2300894996676929&id=700424783390633 மக்களின் உரிமைப் போராட்டங்களை சிதைக்க துடிக்கிறார்கள். டெல்லியில் வன்முறைகளை சங்பரிவார் ஆதரவு கூலிப் படையினர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள். கபில் மிஸ்ராவின் டிவிட்டர் பதிவுகளை பார்த்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இந்த கலவரங்களை கண்டித்து அவர்கள் மீது FIR பதிவு செய்ய சொல்லி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்து