மஜக கோவை G.Mநகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா…

image

image

ஆக.15., மனிதநேய ஜனநாயககட்சி கோவை G.Mநகர் கிளையின் சார்பாக சுதந்திர தினவிழா கொடியேற்று விழாவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வும் அதைத் தொடர்ந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் Gm நகர் அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது கலந்துகொண்டு மருத்துவமுகாமை துவக்கி வைத்தார் .

இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், துணை செயலாளர் அப்துல் பஷீர்,
கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி , கொள்கைபரப்பு செயலாளர் அணி செயலாளர் கோவை நாசர், மாநில பேச்சாளர் திருப்பூர் ஹைதர்அலி, மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் பதுருதீன், துணைச் செயலாளர் Tms.அப்பாஸ் மற்றும் பல்வேறு அணி மற்றும் கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
அனுபவ் ரவி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்தமுகாமில் 152 பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். இதில் 4பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை  செய்ய மஜக மூலம் பரிந்துரைக்கப்பட்டது
எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

தகவல் : மஜக ஊடகபிரிவு

தகவல் : மஜக ஊடகபிரிவு