மஜக சார்பில் டிசம்பர்-6 ரயில் நிலையம் முற்றுகை..!

1992 ஆம் ஆண்டு டிசம்பர்-6 ஆம் நாள், இந்தியாவின் மாண்பை சில பாசிசவாதிகள் சீர்குலைத்த நாள்.

உலக அரங்கில் இந்தியாவை தலை குனியச் செய்தனர் சங்பரிவாரங்கள் !

இந்தியாவின் வரலாற்றுச் சான்றாக, மத சார்பின்மையின் அடையாளமாக விளங்கிய பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கினர் இந்த கயவர்கள்.

இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

எம்.எஸ்.லிபரான் கமிஷன் மூலம் அடையாளம் கட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றோர்களின் மீது இதுவரை உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கை விரைந்து நடத்தி முடித்து, பள்ளிவாசல் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

மத்திய அரசைக் கண்டித்தும்,கோரிக்கைகளை  வலியுறுத்தியும்
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்,
2017 டிசம்பர் 6 ஆம் நாள்,
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில்

“இரயில் நிலையம் முற்றுகை”
(ரயில் நிலையம் இல்லா இடங்களில்
தபால் நிலையம் முற்றுகை)

அனைத்து சமூக மக்களையும் ஒன்று திரட்டி அடையாளப் போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து சமூக மக்களும் ஆதரவளிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
எம்.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.