(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)
இந்திய திருநாட்டின் 14- வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
அவர் இதற்கு முன்பு ஒரு இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்துபவராக இருந்திருக்கலாம். அதுவே அவருக்கு எதிரான விவாதங்களை கூர்மையாக்கியது.
நேற்று முதல் பல்வேறு சாதி , மதங்கள் , இனங்களை சேர்ந்த 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தையும் , பன்மை கலாச்சாரம் கொண்ட தேசத்தின் குடியரசு தலைவர் என்ற அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்.
அதை உணர்ந்து அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும், பல்வேறு சமூக மக்களின் பண்பாடுகளையும் அரவணைத்து, மதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண் ;
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21.07.2017