மஜக பொதுச் செயலாளர் இல்லத்துக்கு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் வருகை!

image

image

image

image

வேதாரண்யம்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு , முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் MLA   அவர்கள் வருகை தந்தார்.

இருவரும் சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர்கள் என்பதும் , அபுபக்கர் அவர்கள் சூப்பர் சீனியர் என்பதும் , இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக  நண்பர்களாக இருந்து வருவதும் , குறிப்பிடத்தக்கது.

தற்போது அரசியல் ரீதியாக வெவ்வேறு அணியிலும் , கட்சியிலும் இருந்தாலும் அதையும் தாண்டி சட்டசபை நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான வகையில் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

அபுபக்கர் அவர்களுடன் , தளபதி ஷபிக்குர் ரஹ்மான் ஹஜ்ரத் , மக்கீன் உள்ளிட்ட IUML -ன் நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.சேக் அப்துல்லாஹ் , நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் அ.ஷேக் மன்சூர் மற்றும் வேதாரண்யம் நகர மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்:

மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT WING
வேதை – நகரம்
நாகை தெற்கு மாவட்டம்.