15 தீர்மானங்கள் நிறைவேற்றம்! எழுச்சியுடன் நடைப்பெற்ற மஜக சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!

டிச:08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (டிச 7, 2021) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது.

இதில் பொருளாளர் ஹாருண் ரசீது, அவைத் தலைவர் நாசர் உமரீ, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, சுல்தான் அமீர், தைமியா,நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநிலத் துணைச்செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சிறைவாசிகள் விடுதலை

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்து வரும் ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல் கட்டமாக ° கோவை மத்திய சிறையை முற்றுகையிடுவது ‘ என்றும், இதில் பொதுமக்களுடன் முக்கிய ளையும் பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

2. நாகலாந்து வன்முறைக்கு கண்டனம்

நாகலாந்து மாநிலத்தில் ராணுவத்தினர் அப்பாவி பொதுமக்கள் 14 பேரை சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிப்பதுடன், இப்பா தக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இக் கூட்டம் கோறுகிறது. மேலும் நாகலாந்து மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்

3. உள்ளாட்சி தேர்தல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் பழைய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என இக் கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

4. உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுவது என்றும், வாய்ப்புள்ள இடங்களில் உள்ளுர் சூழலுக்கு ஏற்ப வியூகங்களை வகுப்பது என்றும், அச்சூழவில் அதற்காக விருப்ப மனுத்தாக்கலை மேலிட பொறுப்பாளர்களிடம் கட்சியினர் வகுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

5. வார்டு வறையறையில் சமூக நீதி

உள்ளாட்சி தேர்தலில் வார்டு எல்லை வரையறைகளில் அனைத்து மக்களின் சமூக நீதி மதிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் வகையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பலர் நீதிமன்றங்களுக்கும் சென்றுள்ளனர்.

எனவே தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் இதில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் இக்குறைகளை போக்கி, அதன்பிறகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

6. மழைக்கால நிவாரணம்

சமீபத்தில் தமிழக முழுதும் பெய்த கனமழையின் போது தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டுகிறது.

இப் பருவ மழையால் முழுதும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7. ஒன்றிய அரசு உதவ வேண்டும்

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் புதுப்பிப்பு, கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8. கொடும் சட்டங்களை ரத்து செய்க

AFSAA போன்ற மக்கள் விரோத சட்டங்கள் பொதுமக்களின் வாழ்வுரிமைகளை நசுக்குவதற்கே பயன்படுவதால், இச்சட்டங்களை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

9. விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஓராண்டாக தொடர்ந்து அறவழியில் போராடி ஒன்றிய அரசையும், பிரதமரையும் பணிய வைத்து, அச்சட்டங்களை திரும்ப பெறச் செய்து வெற்றி ஈட்டிய விவசாய சங்கங்களுக்கும், விவசாயிகளுக்கும் இக் கூட்டம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் இதற்காக போராடி உயிர் நீத்த 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் தலா 50 லட்சம் இழப்பீடாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

10. வசீம் அக்ரம் குடும்பத்திற்கு இழப்பீடு தருக

கடந்த 10.09.2021 அன்று கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மருந்துகளுக்கு எதிராக செயல்பட்ட மஜக முன்னால் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் கூலிப்படையால் அநியாயமாக கொல்லப்பட்டார்.

அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற அனைவரின் கோரிக்கைகளையும் தமிழக அரசு இதுவரை ஏற்காதது பலத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தருவதாக இக் கூட்டம் கருதுகிறது.

எனவே தமிழக அரசு கஞ்சா கும்பலுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் மஜக வின் வேண்டுகோளை ஏற்று, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் நிதியளித்து உதவிய அதிமுக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கும், சேவை அமைப்புகளுக்கும், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இக் கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

11. வக்பு வாரியம் கல்லூரிகளை தொடங்க வேண்டும்

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும், புதிதாக மண்டல வாரியாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றும் இக்கட்டம் கேட்டுக் கொள்கிறது.

12.வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த நிலையில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் அதே நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என 1992 ல் ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியது.

பாபர் மசூதி அநியாயமாக இடிக்கப்பட்டு, பிறகு சட்டத்தை மீறிய வினோதமான தீர்ப்பின் மூலம் நீதி பந்தாடப்பட்டதை நாடு உணர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் அடுத்து காசி, மதுரா ஆகியவற்றில் உள்ள பள்ளிவாசல்களையும் கைப்பற்றுவோம் என சங்பரிவார வலதுசாரி கும்பல்கள் முழங்குவதை நாடு அச்சத்துடன் உற்று நோக்குகிறது.

இவர்களின் வகுப்பு வாத , வன் முறைப் போக்குகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரல் எழுப்ப வேண்டும், இத்தகைய தீய சக்திகளை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் இக்வட்டம் கேட்டுக் கொள்கிறது

13. ஒமெக்ரான் எச்சரிக்கை

கொரணா தொற்று அடுத்தடுத்து உருமாறி, தற்போது வீரியமிக்க ஒமெக்ரான் வைரஸாக உருவாகி நம் நாட்டுக்குள்ளும் தலைக் காட்டியிருப்பது கவலையளிக்கிறது.

இதற்கு எதிராக ஒன்றிய அரசும், தமிழக அரசும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பும் துணை நிற்க வேண்டும் என இக் கூட்டம் சகலரையும் கேட்டுக் கொள்கிறது.

14. நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக, அச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

15. தமிழக முன்னாள் கவர்னர் ரோசைய்யா, அ தி மு க முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் ஆகியோரின் மறைவுக்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர்கள் புதுமடம் அணிஸ், பொறியாளர் சைபுல்லாஹ், முகம்மது ஷபி, நாகை முபாரக், நெய்வேலி இப்ராகிம், பாபு ஷாயின்ஷா, காயல்.சாகுல், துரைமுகம்மது, வல்லம் அகமது கபீர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாநிலச் செயலாளர் கோவை ஜாபர், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, மருத்துவ சேவை அணிச் செயலாளர் அப்துல் ரஹ்மான் , விவசாய அணி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம்,IKP மாநிலச் செயலாளர் லேனா.இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் தாரிக் (சிறப்பு அழைப்பு ) ஆகியோரும் இந்த சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கட்சி வளர்ச்சிக்கான புதிய திட்டமிடல்களோடு, ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளோடு மதியம் 11.30 முதல் மாலை 6.30 வரை இக் கூட்டம் நடைபெற்றது.

நிறைவாக கட்சியின் முழக்கங்களை எழுப்பியாக முழங்கி கூட்டம் நிறைவுப் பெற்று, கோவையில் சங்கமிப்போம் என்ற சூளுரையோடு அனைவரும் புறப்பட்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
07.12.2021