மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம்! MJTS மாநில செயலாளர் ஜாபர்அலி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக MJTS, மாநில செயலாளர் M.H. .ஜாபர் அலி அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் IKP யின் சார்பில் முன்னெடுக்கப்படும் போதைக்கு எதிரான பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது, மேலும் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், S.உமர்பாரூக் R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.ஆரீப் அப்பாஸ், மாவட்ட செய்ற்குழு உறுப்பினர்கள் SMR. பாரி, MEB.ஹக்கீம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
03.10.2021