தென்காசியில் மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லா அவர்களின் சகோதரி திருமணம் கடந்த 04,08,2021 அன்று நடைபெற்றது.

திருமணத்தன்று பங்கெடுக்க முடியாத சூழ்நிலையில் அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது Mcom.அவர்கள் நேரில் சென்று சந்தித்து மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பீர் மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் பொன்னானி அபுதாகிர், காதர், வடகரை பேரூர் கழக செயலாளர் அலி, ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
14.08.2021