காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முகம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர்கள் முகமது பிலால், லட்சுமணன், தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.முகமது மன்சூர் B.sc ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அப்துல்லா, பொருளாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் ஜியாவுதீன், இளைஞரணி செயலாளர் பாப்புலர் ஹக்கீம் ,தொழிற் சங்க செயலாளர் ராஜ்கபூர் ,நகர துணை செயலாளர் ரபியுதீன், நகர இளைஞரணி துணை செயலாளர் அர்ஷத், நகர மருத்துவ சேவை அணி துணை செயலாளர் சிராஜ்தீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
இறுதியில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா, நன்றியுரையாற்றினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கறம்பக்குடி
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
04.08.2021