You are here

சென்னையில் மஜகவின் இஃப்தார் நிகழ்வில் வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா MP பங்கேற்பு…!

சென்னை.ஜூன்.07., சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு (#இஃப்தார்) நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் நேற்று (06.06.2018) மாலை நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, வக்பு வாரிய தலைவர் #அன்வர்_ராஜா_MP, மஜக பொருளாளர் #SS_ஹாரூன்_ரசீது, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA, மாநில செயலாளர்கள் NA.தைமிய்யா, சீனி முகம்மது, அ.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடும் மழை கொட்டத் தொடங்கியதால், அஹ்மது அலி பார்பையா பள்ளிக்கூடத்தின் திறந்த வெளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, பள்ளிக்கூட உட்பகுதிக்கு 6 மணிக்கு அவசர, அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

கொட்டும் மழையிலும் திரளானோர் வருகை தந்து இஃப்தாரில் பங்கேற்றனர். அன்வர் ராஜா MP அவர்களுக்கும், தனியரசு MLA அவர்களுக்கும் தலைமை நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் A.அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.H. பீர் முஹம்மது, T.ரஃவுப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் S.முகம்மது ரியாசுதீன், T.M.யூசுப், R.காஜா, மாவட்ட MJTS செயலாளர் மூசா கனி, IKP மாவட்ட செயலாளர் பிலால், மாணவர் இந்தியா நிர்வாகி இஸ்மாயில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜலாலுதீன், முகம்மது அலி இஷாக், செய்யது ஜமால், சலீம், ஆதம் மார்க்கெட் கிளை செயலாளர் PS.முகம்மது முகைதீன் மற்றும் எழும்பூர், துறைமுக பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்.
06.06.2018

Top