மஜக தொழிற்சங்கம் சார்பில் திருப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சி..!

திருப்பூர்.ஜூன்.06, மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி MJTS மாவட்ட செயலாளர் சாகுல் தலைமையில் ASMR திருமண மன்டபத்தில்
நடைபெற்றது.

MJTS மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்களும், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்களும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் காதர்கான் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெஃளபில் ரிஸ்வான், மனித உரிமைகள் அணி துணைச்செயலாளர் சாகுல், முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அங்கேரி பாளையம் பகுதி முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் குடும்பமாக கலந்து கொண்டு நோன்பு துறக்கும் இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது .

சமூக நல்லிணக்கம் பூத்துக் குழுங்கிய இந்த நிகழ்ச்சியை அப்துல் வஹாப், கரூர் செந்தில், சிக்கந்தர் உள்ளிட்ட அப்பகுதி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
06.06.2018