Year:
SDPI இல்ல துயர நிகழ்வு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்….
மார்ச்.06., SDPI கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முஹம்மது ரஷீத் அவர்களது இளைய மகன் உசைர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்தார். இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை- ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். 9 ஆண்டுகளாக அவரை நோயுடன் பராமரித்த தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர்களது பிள்ளையின் மறு உலக வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் கூறினார். அப்போது மாநில செயலாளர் நாகை. முபாரக், மாநில துணைச் செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவகங்கை அபுதாஹீர் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வட_சென்னை_கிழக்கு_மாவட்டம் 06.03.2024.
சேலத்தை தொடர்ந்து ஒசூரில்… தொடரும் எழுச்சிமிகு இணைவுகள்… மஜகவில் இணைந்த சமூக நீதி பட்டாளம்…..
மார்ச்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியல் மற்றும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையிலான செயல்பாடு, அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னார்வத்துடன் இளைஞர்களும், மாணவர்களும், வணிகர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்.28 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற தலைமை பொதுக்குழுவிற்கு பின்னர் கட்சியில் இணைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஜிங்கலூர் ஊராட்சியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். கடந்த 3 நாட்களில் சேலம், மற்றும் கிருஷ்ணகிரியை தொடர்ந்து அடுத்தடுத்து இது போன்ற இணைப்புகள் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகமது உமர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ADS. சர்தார், சையத் ஜலால், ஜிங்களூர் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகபூப் ஷெரீப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அன்சர், ஒன்றிய செயலாளர் பாஷா, ஓசூர் மாநகர துணை செயலாளர் மகபூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம் 05.03.2024.
நெல்லையில்…. தூய்மை பணியாளருக்கு மஜக நிதி உதவி….
மார்ச்.06; நெல்லை மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் விபத்தினால் இரு கால்களையும் இழந்த வசந்தி என்ற பெண்ணிற்கு ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை கலைக்கண்ணன் வேண்டுகோளுக்கு இணங்க மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பாளை A. M.பாரூக் அவர்கள் நிதி உதவி வழங்கினார். நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா, மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் மேலப்பாளையம் 50 வார்டு முஹமது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால் சேக், உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நெல்லை_மாவட்டம் 05.03.2024.
சேலத்தில்… மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்….
மார்ச்.05., சேலத்தில் மமக செயல்பாட்டாளர் AK.சதாம் உசேன் தலைமையில் திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் மாற்று கட்சியை சேர்ந்தவர்களின் இணைப்புகள் தொடரும் என மஜக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 05.03.2024.