மார்ச்.08., பிரபல வணிக நிறுவனமான #ST கொரியர் சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சென்னை - ராயபுரம் - ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. இதில் #மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது கூறியதாவது... பலஸ்தீன மக்கள் நோன்பு காலத்தில் காலை சஹர் உணவுக்கும், நோன்பு துறப்புக்கும் உணவின்றி தவிக்கிறார்கள். அம்மக்களின் தேவைகள் நிறைவேறவும், சுதந்திர பலஸ்தீனம் மலரவும், இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் வீழ்ச்சியடையவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் ' என பேசினார். இதில் ST கொரியர் நிறுவனர் அன்சாரி, நவாஸ் கனி MP உள்ளிட்ட ST கொரியர் குடும்பத்தினர் பங்கேற்று அனைவரையும் வரவேற்றனர். இதில் அரசியல், சமூகம், கல்வி , வணிகம் ஆகிய துறைகளை சேர்ந்த ஆளுமைகளும் பங்கேற்றனர். இதில் தலைவர் அவர்களுடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_வடசென்னை_கிழக்கு_மாவட்டம் 18.03.24.
Year:
திருவெற்றியூரில்… IKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு..
மார்ச்.17., இஸ்லாமிய கலாச்சார பேரவையின் (IKP) வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாட்டை மஜக மாநில துணை செயலாளர் S.M.நாசர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
சான்றோர் சந்திப்பு… மஜக தலைமையகத்திற்கு தோழர்கள் வருகை..
மார்ச்.16., நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை வழிநடத்தும் வகையில் 'தமிழ்நாடு பொது மேடை - 2014 ' என்ற அமைப்பு தமிழ்ச் சான்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் சார்பில் தோழர். தியாகு தலைமையில் தமிழ்நாடு பொது மேடை இணை ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில், மற்றும் நிர்வாகிகள் தாமஸ், பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று இரண்டாவது முறையாக மஜக தலைமையகத்திற்கு வந்து உரையாடினர். தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் ஆகியோரை சந்தித்த அக்குழு, நாடாளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய அளவினான பரப்புரைகள், நிலவரங்கள், தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து விவாதித்தது. மஜக-வின் நிலைபாடு குறித்து பலரும் எதிர்பார்ப்பதாகவும், வாக்குகளை இணைக்கும் முக்கிய சக்தியாக மஜக இருப்பதால் இக் கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் கூறினர். பிறகு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கையளித்தனர். இது குறித்து அவர்களிடம் பேசிய தலைவர் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்களை பல்வேறு தரப்பினர் சந்தித்து பேசுவது குறித்தும் கூறினார். இது குறித்து மார்ச் 18 அன்று சென்னையில் தலைமை நிர்வாகக் குழு கூடி விவாதிக்கும் என நேற்று அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். பிறகு மஜக தலைமையகத்தில் நடந்த இஃப்தார்
மஜக தலைமையக அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இதுவரை எந்த அரசியல் நிலைபாடும் எடுக்கப்படவில்லை. 28.02.2024 அன்று மயிலாடுதுறையில் நடந்த கட்சியின் தலைமை பொதுக்குழு அளித்திருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், மார்ச் 18 அன்று கட்சியின் தலைமை நிர்வாகக்குழு சென்னையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கூடி இது குறித்து விவாதிக்க இருக்கிறது. அதன் பிறகு மஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.முகம்மது நாசர் பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.03.2024.
வேலூரில்..! மஜக சார்பில் CAA சட்ட எதிர்ப்பு போராட்டம்…
மார்ச்.16., மக்கள் விரோத கருப்பு சட்டங்களான CAA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான மஜக-வினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பரித்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நூருல்லா, அஸ்லாம் ஷெரீப், இளைஞரணி செயலாளர் நபீஸ் ரஹ்மான், MJTS செயலாளர் அப்சர் அகமத், நகர நிர்வாகிகள் செய்யது தாவூத், நாசிர் உசேன், அர்ஃபாத், கவுஸ் பாஷா, உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வேலூர்_மாவட்டம் 15-03-2024.