சான்றோர் சந்திப்பு… மஜக தலைமையகத்திற்கு தோழர்கள் வருகை..

மார்ச்.16.,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை வழிநடத்தும் வகையில் ‘தமிழ்நாடு பொது மேடை – 2014 ‘ என்ற அமைப்பு தமிழ்ச் சான்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் சார்பில் தோழர். தியாகு தலைமையில் தமிழ்நாடு பொது மேடை இணை ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில், மற்றும் நிர்வாகிகள் தாமஸ், பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று இரண்டாவது முறையாக மஜக தலைமையகத்திற்கு வந்து உரையாடினர்.

தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் ஆகியோரை சந்தித்த அக்குழு, நாடாளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய அளவினான பரப்புரைகள், நிலவரங்கள், தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து விவாதித்தது.

மஜக-வின் நிலைபாடு குறித்து பலரும் எதிர்பார்ப்பதாகவும், வாக்குகளை இணைக்கும் முக்கிய சக்தியாக மஜக இருப்பதால் இக் கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் கூறினர்.

பிறகு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கையளித்தனர்.

இது குறித்து அவர்களிடம் பேசிய தலைவர் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்களை பல்வேறு தரப்பினர் சந்தித்து பேசுவது குறித்தும் கூறினார்.

இது குறித்து மார்ச் 18 அன்று சென்னையில் தலைமை நிர்வாகக் குழு கூடி விவாதிக்கும் என நேற்று அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிறகு மஜக தலைமையகத்தில் நடந்த இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்விலும் அவர்கள் பங்கேற்றனர்.

இதில் மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம். ஷஃபி, நாகை. முபாரக், நெய்வேலி இப்ராஹிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், பேரா. சலாம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான், வழக்கறிஞர் பாசறை செயலாளர் அமீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
16.03.2024.