மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் மார்ச் 03, 2023 அன்று 'மறுமலர்ச்சி மாநாடு' குவைத்தில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளில் குவைத் மண்டலத்தில் நடைபெறும் 5-வது மாநாடு இதுவாகும். இம்மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திரு திருநாவுக்கரசு M.P. அவர்கள், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள் தமிழகத்திற்கு திடீர் வருகை மேற்கொண்டதால் தனது பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது, அதனால் அவர் பேசி அனுப்பிய 10 நிமிட வாழ்த்து காணொளி ஒளிபரப்பப்பட்டது, இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஆலிம் அல் புகாரி அவர்கள் பங்கேற்று பேசினார், அதுபோல் TVS குழுமத்தின் தலைவர் S.M.ஹைதர் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்வு இரவு 10.30 மணிக்கு முடிந்தது இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஒரு மணி நேரம் 20 நிமிடம் வரை பேசினார். அவரது எழுச்சியுரையை அமைதியுடன் அரங்கம் உற்று நோக்கியது, மறுமலர்ச்சி என்ற தலைப்பில் பேசிய அவர், இந்தியாவில் அரசியல் மறுமலர்ச்சி எற்பட வேண்டிய அவசியம் குறித்து
Month:
சிலம்பாட்ட நிகழ்ச்சி… மஜக பிரதிநிதிகள் சங்கமத்தில் சாகசங்கள்…!
கடந்த 28.02.2023 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சாவூரில் எட்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடத்திய "மஜக பிரதிநிதிகள் சங்கமத்தில்" பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது. மதியத்திற்கு பிந்தையை நிகழ்வுகளில் பண்டாரவடையை சேர்ந்த சிலம்பாட்ட குழுவினர் தங்கள் வீரதீர சாகச நிகழ்ச்சிகளை மேடையில் அரங்கேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். இதில் வால் வீச்சு, மான் கொம்பு விளையாட்டு, கம்பு சண்டை, உடல் பயிற்சி முறைகள் என அரை மணி நேரம் சிறுவர், சிறுமிகள் சிறப்பாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர். அதில் ஹிஜாப் அணிந்த ஒரு சிறுமி வால் வீச்சு விளையாட்டை நடத்திய போது அரங்கமே அதிர்ந்தது. அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஹிஜாப் ஒரு தடையில்லை என அந்தச் சிறுமி தனது சாகசத்தால் வெளிப்படுத்தினார். மாஸ்டர் டேவிட் தலைமையிலான இக்குழுவை பலரும் பாராட்டினர். மருத்துவ சேவை அணியின் மாநில பொருளாளர் பண்டாரவடை மஃரூப் மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர் சேக் அகமதுல்லா ஆகியோர் இந்த ஏற்பாட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.
iuml நிர்வாகிகள் வருகை… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் ஆகியோர் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தனர். லீக்கின் 75-வது ஆண்டு பவள விழா அழைப்பிதழை வழங்கினர். இந்தியாவின் பழம்பெரும் கட்சியாகவும், தேசிய அந்தஸ்துடன் தனி சின்னமும் கொண்ட கட்சியாகவும் திகழும் முஸ்லிம் லீக்கிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துவதாகவும் கூறிய பொதுச்செயலாளர் அவர்கள், மஜக-வினர் மார்ச் 10 ஆம் தேதி லீக்கின் பவள விழா மாநாட்டில் திரளாக பங்கேற்க சொல்வதாகவும் கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் அசாருதீன், இளைஞர் அணி மாநில பொருளாளர் புதுமடம் பைசல், தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை உசேன், MJTS மநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், பொருளாளர் காஜா மைதீன், பத்திரிக்கையாளர் சாகுல், மற்றும் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தப்ஸ் குழுவின் கலை நிகழ்வு…
கடந்த 28.02.2023 அன்று தஞ்சையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய "மஜக பிரதிநிதிகள் சங்கமம்" நிகழ்வில், தமிழக கடலோர மாவட்டங்களில் நீண்ட காலமாக பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்த 'தப்ஸ்' குழுவின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. கூத்தாநல்லூரை சேர்ந்த 'தீனிசை குரலோன்' M.A.ஷேக் முஜிப் ரஹ்மான் அவர்கள் தலைமையில் வந்த தப்ஸ் குழுவினர் பாடல்களை பாடி 'தப்ஸ்' அடித்து அரங்கை வசப்படுத்தினார். 'இறைவனிடம் கையேந்துங்கள்' போன்ற பாடல்களையும், மஜக-வை போற்றும் பாடல்களையும் பாட கூட்டம் உற்சாகமானது. குறிப்பாக கலைமாமணி நாகூர் சலீம் எழுதி, காயல் ஷேக் முஹம்மது பாடிய 'கப்பலுக்கு போன மச்சான்' என்ற பாடலை பாடியதும் நிர்வாகிகள் உற்சாகமாகினர். வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தவர்களும் உணர்ச்சிமயமாகினர். பலர் "once more" கேட்க அப்பாடல் மட்டும் இரண்டாவது அமர்விலும் பாடப்பட்டது. சிலர் 'வளர்த்த கிடா... மார்பில் பாய்ந்ததடா' என்ற பாடலைப் பாட வலியுறுத்தினர் . அப்போது பொதுச்செயலாளர் அவர்கள், இப்போது அது வேண்டாம் என தவிர்த்து விட்டார். சங்கம நிகழ்வில் "தப்ஸ்" கலை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்க மரக்கன்றுகள்.!!
மஜக பிரதிநிதிகள் சங்கமத்தில் நெகிழ்ச்சி மிகு நிகழ்வு... கடந்த 28.02.2023 அன்று தஞ்சையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய 'மஜக பிரதிநிதிகள் சங்கமம்' நிகழ்வு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருந்தது . இந்நிகழ்வுக்கு வருகை தந்து வாழ்த்திய தஞ்சாவூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னதுரை MLA அவர்கள், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் , தஞ்சை பாரத் கல்வி குழுமத்தின தலைவர் திருமதி.புனிதா கணேசன் ஆகியோரும் புகைப்பட கண்காட்சிகளை பார்த்துவிட்டு மஜகவின் நல்லிணக்க பணிகளை பாராட்டினர். உரையரங்கின்போது, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. பி ஆர் பாண்டியன் அவர்கள், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அங்கு வருகை தந்திருந்த திருவடிக்குடில் சுவாமிகளுக்கும், ஜமாத்துல் உலாமா பிரமுகர் அப்துல் சமது ஹஜரத் அவர்களுக்கும் வழங்கினார். அவர்கள் இருவரும் அதை இணைத்து பெற்றுக்கொண்ட போது அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது. இதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என அனைவரும் பாராட்டினர்.