மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் K.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தான திட்டமிடல், மாவட்டத்தில் பரவலாக கட்சிக் கொடியேற்று நிகழ்வுகளை நடத்துவது குறித்தான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் R. முகமது அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.பகுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் R.சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஸ்மத்துல்லா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.மன்சூர் அலி, நகர நிர்வாகிகள் A.ஹாஜி முஹம்மது, M.முஹம்மது அப்பாஸ், S.பாரூக், அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Month:
நீலகிரி மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா…
மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் புதிய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் இன்று (12.03.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜாவித் ஜாஃபர் அவர்கள் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வாசு, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹனீபா, cpi மாவட்ட செயலாளர் கனி, திமுக கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் வர்மா, மேற்கு மாவட்ட துணை செயலாளர் மஜீத் அமீநி, ஜோஸ், நிசார் பாபு, ரபீக், இளைஞர் அணி செயலாளர் ரஷீத் மற்றும் கூடலூர் நகர செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் K.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்றும், பரவலாக கட்சிக் கொடியேற்று நிகழ்வுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் K.பாஷா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் KSM.பக்ருதீன் ஆகியோருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் R. முகமது அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.பகுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் R.சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஸ்மத்துல்லா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.மன்சூர் அலி, நகர நிர்வாகிகள் A.ஹாஜி முஹம்மது, M.முஹம்மது அப்பாஸ், S.பாரூக், அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக, Ksm.பக்ருதீன் கந்தசாமி லேஅவுட், இரண்டாவது தெரு, கேகே ரோடு, விழுப்புரம் அலைபேசி; 9443454100 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.03.2023
நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக, K. பாஷா 11/17 கந்தசாமி லேஅவுட், கே.கே.ரோடு, விழுப்புரம் அலைபேசி; 9025555044 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.03.2023