இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம் அவர்கள் இரண்டு மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் இயற்கை மணக்கிறது எனலாம். உலகிலேயே தனக்கான உணவை தயாரித்து கொள்ளும் அறிவை மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த மாபெரும் கடமையை விவசாயிகள் செய்கிறார்கள். அந்த வகையில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நலன் சேர்க்கும் வகையில் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையை 'திராவிட மாடல்' அரசு செய்து வருகிறது. இதற்காக 38,904 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. கூட்டுறவு பயிர் கடன் வழங்க 14 ஆயிரம் கோடி, திருச்சி, நாகை இடையே வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க 1000 கோடி, ஆடு, மாடு, கோழி வளர்க்க உதவிட 1000 கோடி, நுண்ணுயிர் பாசன திட்ட மேம்பாட்டுக்கு 450 கோடி என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழிச்சாலைகள், கிடங்குகள் அமைக்க ஊக்குவிப்பு, 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்ய இலக்கு, விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்க திட்டம், 550 ஹெக்டேரில் கூடுதலாக முந்திரி சாகுபடியை விரிவுப்படுத்துதல், தென்னை வளர்ச்சியை
Month:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை! மஜக வரவேற்கிறது!
தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்பித்துள்ள நிதிநிலை அறிக்கை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும், காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையின் நட்சத்திரங்கள் என கூறலாம். மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 1444 கோடி ரூபாய், அதிகபட்ச அளவாக பள்ளிக்கல்வித்துறைக்கு 40299 கோடி ரூபாய், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 1500 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது திருப்திகரமாக இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும், கோவை, மதுரை மாநகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டத்தக்கது. 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள், வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் விரிவாக்கம், 33,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம், நெல்லையில் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற அறிவிப்புகளும் குறிப்பிடத்தக்கது. தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், புனரமைக்கவும்
நன்கொடை சேகரிப்போம்… நலத்திட்டங்களை முன்னெடுப்போம்!
பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே... ஏக இறைவனின் அமைதியும் ஆசியும், சூழ்க.. குறுகிய காலத்தில் மற்றுமொரு மடல் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நமது எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த பிப்ரவரி 28 அன்று தஞ்சை மாநகரில் நாம் எல்லோரும் கூடி மகிழ்ந்தோம். அந்த பொன்னான நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. வேலை நாளான செவ்வாய்க்கிழமை அன்று; ஒரு வார கால அவகாசத்தில்; தமிழகமெங்கிருந்தும் மஜக-வின் பிரதிநிதிகள் கூடி; 20 வகையான நிகழ்ச்சிகளுடன்; சங்கமம் நிகழ்வை உற்சாகமாக நடத்திய பூரிப்பு இன்னும் அகலவில்லை. அந்த உற்சாகத்தில் புதிய கிளைகள் உருவாக்கம்; புதிய உறுப்பினர்கள் வருகை; கொடியேற்றம் என மஜ-கவின் பணிகள் புது ரத்தம் பாய்ச்ச பட்ட உணர்வுடன் எழுச்சி அடைந்திருக்கிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம். ஓரமாக நின்றவர்கள், ஒதுங்கி இருந்தவர்கள், ஓய்வில் இருந்தவர்கள் என எல்லோரும் தீவிர கட்சிப் பணிகளில் இறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவ வீரர்களைப் போல நமது தொண்டர்கள் களமாடுவதும், கலகத்தை ஒடுக்குவதும், பகையை பந்தாடுவதும், கட்சியை காக்க நினைப்பதும், நமது புதியபாதை - புதிய பயணத்தில் மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது. சொந்தங்களே.. நமது தொண்டர்கள் முன்பை விட வீரியமாக இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அது பயனுள்ள
நெற்பயிர்களை மட்டுமல்ல நற்பெயர்களையும் பெற்று தாருங்கள்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மயிலாடுதுறையில் EOROKIDS SCHOOL சார்பில் 11-ஆம் ஆண்டு விழா "நம்ம உழவன்" என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அதன் தாளாளர் சாதிக் தலைமை ஏற்றார். இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மேதகு அப்துல் கலாமின் உதவியாளராக பணிபுரிந்த டாக்டர் பொன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்வில் விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னிறுத்தி கலை நிகழ்ச்சிகளும், காட்சி அமைப்புகளும் முன்னெடுக்கப்பட்டன. வளரும் தலைமுறை மாணவ - மாணவிகளிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டாக்டர் பொன்ராஜ் பேசும்போது, சீனாவில் ஒரு ஏக்கருக்கு 6-டன் நெல் விளைவிக்கப்பட்டது. தமிழகத்தில் "திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின்" மூலம் 7-டன் நெல் விளைவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை என வருத்தப்பட்டார். மேலும் நமக்கு அரசியல்வாதிகளை விட தமிமுன் அன்சாரி போன்ற அரசியல் தலைவர்கள்தான் தேவை என்றும், இவரைப் போன்றவர்கள்தான் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் பாராட்டி பேசினார். பிறகு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது... எல்லா மொழிகளையும் கற்க வேண்டும், ஆனால் தாய் மொழியை இழந்து விடக்கூடாது. அறிவியலையும், முற்போக்கு சிந்தனைகளையும் வரவேற்க
தஞ்சையில் நினைவேந்தல்… உபையதுல்லாவின் நேர்மையும் எளிமையும்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
கடந்த பிப்ரவரி 19 அன்று இறந்த, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா அவர்களளுக்கு சமூக ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும், வணிகர்களும் இணைந்து தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இதில் குன்றக்குடி அடிகளாரும், மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரியும், பாதிரியார் அமுதன் அடிகளாரும் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது அவரது எளிமையையும், அரசியல் நேர்மையையும் பாராட்டினார். மேலும் அவர் பேசியதாவது.... அவர் 14 வயதிலேயே 'திராவிடம் வெல்க' என கரும்பலகையில் எழுதி கொள்கையை பேசினார். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் ஊக்குவித்தார். வெளியில் சொல்லாமல் அவர் தர்மங்களையும், உதவிகளையும் சாதி, மதம் பாராமல் செய்தார். அவர் அமைச்சராக இருந்தபோது, தனது மகன் இறந்த அன்று அந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு, கடமை தவறாமல் ஜனாதிபதியை வரவேற்க திண்டுக்கல்லுக்கு சென்றார். இதை அறிந்த ஜனாதிபதி அவரை வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். 2006 தேர்தலில் இவர் போட்டியிட சீட் கேட்கவில்லை. இதை அறிந்த கலைஞர் அவரை அழைத்து போட்டியிட சொல்லி, பிறகு அமைச்சராக்கினார். அவரை நாணயத்தின் மறுபதிப்பு என்றார் கலைஞர். அதனாலேயே வணிக வரித்துரையை அவருக்கு வழங்கினார். அவருக்கு தமிழக அரசு அண்ணா விருதை வழங்கியபோது, அலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பதிலுக்கு அவர் எனது 'புயலோடு போராடும்