தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்!! விவசாயிகளை வெப்பத்திலிருந்து தொழில்நுட்பத்திற்கு அழைத்து செல்கிறது…

இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம் அவர்கள் இரண்டு மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்திருக்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் இயற்கை மணக்கிறது எனலாம்.

உலகிலேயே தனக்கான உணவை தயாரித்து கொள்ளும் அறிவை மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த மாபெரும் கடமையை விவசாயிகள் செய்கிறார்கள்.

அந்த வகையில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நலன் சேர்க்கும் வகையில் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையை ‘திராவிட மாடல்’ அரசு செய்து வருகிறது.

இதற்காக 38,904 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

கூட்டுறவு பயிர் கடன் வழங்க 14 ஆயிரம் கோடி, திருச்சி, நாகை இடையே வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க 1000 கோடி, ஆடு, மாடு, கோழி வளர்க்க உதவிட 1000 கோடி, நுண்ணுயிர் பாசன திட்ட மேம்பாட்டுக்கு 450 கோடி என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உணவு பதப்படுத்தும் தொழிச்சாலைகள், கிடங்குகள் அமைக்க ஊக்குவிப்பு, 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்ய இலக்கு, விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்க திட்டம், 550 ஹெக்டேரில் கூடுதலாக முந்திரி சாகுபடியை விரிவுப்படுத்துதல், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை, முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க திட்டம், குளிர்கால பயிர் சாகுபடிக்கு மானியம், 4 மாவட்டங்களில் புதிதாக மிளகாய் மண்டலங்கள் அமைப்பு, கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை, உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, தேனி வாழைக்கு தனி அடையாளம் பெற தொகுப்பு நிதி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு, வெளிநாட்டு வேளாண் முறையை தமிழகத்தில் அமல்படுத்தல், விவசாயிகள் அயல் நாட்டில் பயிற்சி பெற திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா திட்டம், கழிவிலிருந்து இயற்கை உறம் தயாரித்தல் என நிதிநிலை அறிக்கை முழுக்க விவசாயிகளின் வியர்வைக்கு நன்றி கூறும் வகையில் பன்னீர் தெளிக்கப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக அன்றாட உணவு தேவைகளான தக்காளி, வெங்காயம் ஆகியவை சீராக கிடைத்திட சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பது இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கத்தை கோடிட்டு காட்டுகிறது.

வெப்பத்தில் உழைத்திடும் விவசாயிகளை தொழில்நுட்ப உலகத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையை தயாரித்த வேளாண் அமைச்சர் திரு M.R.K.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், தக்க முறையில் வழி காட்டியிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.

இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறோம்.

இவண்

மு.தமிமுன் அன்சாரி

பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21.03.2023