மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். "மக்களுடன் மஜக" செயல் திட்டத்தின்படி இன்று அத்திக்கடையில் ஏரி, குளங்களை பார்வையிட்டு கலெக்டர் இடம் மனு கொடுப்பது குறித்த ஆலோசனைகளை கூறினார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது.... திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரகம் முன்னெடுக்க வேண்டும். சமீபத்தில் பெய்த கன மழையால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு காத்திருந்த வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது போதாது என விவசாயிகள் கூறுகிறார்கள். தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என மஜக தொடர்ந்து போராடி வருகிறது. இதில் முதல் கட்டமாக நோயாளி கைதிகளையாவது சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிறகு செய்தியாளர்கள் கடலில் 80 கோடியில் கலைஞருக்கு பேனா வைப்பது எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறதே? உங்கள் கருத்து என்ன? என வினவினார்கள். அங்கு டெல்லி JNU பல்கலைக் கழகத்தை போல, கலைஞரின் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றார். பிறகு
Month:
நெய்வேலியில் எழுச்சி… NLC க்கு எதிராக மக்களை திரட்டிய மஜக…!
ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் "மக்களுடன் மஜக" என்ற மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தும் செயல் திட்டங்களை கையிலெடுத்து களமாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று நெய்வேலி சுரங்கம் || விரிவாக்க திட்டத்திற்கு எதிராக நெய்வேலி NLC நிறுவனத்தை கண்டித்து பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர நெய்வேலி இப்ராஹிம் தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் S.ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்கறிஞர் தீ.சு.திருமார்பன், ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜலீல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் E.N.அறிவழகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி செயலாளர் V.K.முருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாகை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் A.H.M.ஹமீது ஜெகபர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்கனவே 65 கிராமங்களின் நிலத்தை கையகபடுத்தி அவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நிலங்களை இழந்த
இராமநாதபுரத்தில் இந்தி திணிப்பை கண்டித்து பொதுக்கூட்டம் .!! மஜக மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி பங்கேற்பு .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரியும், தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசை கண்டித்தும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார் . இதில் மாவட்ட பொருப்புக்குழு தலைவர் முகவை.நசீர், மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர்கள், கீழை.இப்ராஹிம், சித்தார்கோட்டை மீரான், மரைக்காயர் பட்டிணம் அஜ்மல், பணைக்குளம் ஆஷிக், ரியாஸ் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மஜக தலைமையகத்தில் MJTS சென்னை மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சென்னை மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் MJTS மாநில துணை செயலாளர் இப்ராஹிம் தலைமையில் இன்று மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று மஜக 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய ஆட்டோ ஸ்டான்டுகள் திறப்பது என்றும், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மற்றும் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட MJTS மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு இடைத்தேர்தல்… அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மஜக மாவட்ட தலைமையகம் வருகை …!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் வேட்பாளர் உடன் இணைந்து பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாண்புமிகு தமிழக அரசின் தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மஜக கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இச்சந்திப்பின் போது மஜகவின் தேர்தல் பணிக்குழு துணை தலைவரும் மாநில துணை செயலாளருமான பாபு ஷாஹின்ஷா, மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, மாவட்ட பொருளாளர் பாபு, MJTS மாவட்ட செயலாளர் சபர் அலி, ITWING மாவட்ட செயலாளர் பாசித், கருங்கல் பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ் மற்றும் 40-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார், திமுக வார்டு செயலாளர் பாபு, மஜக சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.