ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக தேர்தல் பணிக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பாட்டாளி படிப்பகத்தில் தொழிலாளர்கள் சந்திப்பில் நடைப்பெற்ற வாக்கு சேகரிப்பில் வேட்பாளருடன் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான K.V. தங்கபாலு, ஜோதிமணி MP ஆகியோரும் உடனிருந்தனர். மேலும் துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் , மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், மண்டலம it wing செயலாளர் எக்சான், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட it wing செயலாளர் பாசித், இளைஞரணி திலிப், MJTS சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Month:
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்!! மதுரை மஜகவினர் திடீர் சாலை மற்றியல்..!
மதுரை மாநகர வடக்கு மண்டல 14-வது வார்டு ஆர்.வி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைத்து சாலையில் இருபுறமும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும். மதுரை மாநகர மனிதநேய ஜனநாயக கட்சினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்க்கால அடிப்படையில் அப்பணிகளை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிகழ்வில் மஜக தொழிற்சங்க மாநில பொருளாளர் கனி, மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசி மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் மஜக-வினர் தீவிரமாக களமாடி வருகின்றனர். தற்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் பரப்புரையும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை முன்னிட்டு அமைச்சர்கள் திரு. முத்துசாமி, திரு. செந்தில் பாலாஜி ஆகியோரையும் அவர் சந்தித்து தேர்தல் கள நிலவரம் குறித்து விவாதித்தார். அப்போது துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவரும், மாநில துணைச் செயலாளருமான பாபு ஷாஷின்சா, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், IT மண்டல செயலாளர் எஹ்சானுல்லா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அமைச்சர்கள் மஜக-வின் தேர்தல் பணிகள் மிக சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டினர்.
ஈரோடு இடைத்தேர்தல்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தீவிர பரப்புரை!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று தீவிர பரப்புரை மேற்கொண்டார். அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர், கருங்கள்பாளையம் கலைஞர் நகரில் பேசிய அவர், நீங்கள் கை சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு அளிக்கும் சான்று என பேசினார். 200-க்கும் மேற்பட்ட மஜகவினர் கொடிகளுடன், எழுச்சியுடன் சுற்றி வந்தனர். இதை கண்ட EVKS.இளங்கோவன் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மஜக-வினரை பாராட்டினார். பொதுச்செயலாளரிடம் இன்னொரு நாளையும் பரப்புரைக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னால் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், முகம்மது சகி Ex MP, அவர்களும் உடன் இருந்தனர். மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், சேலம்
பொதக்குடி தாஜ்தீன் மஜகவில் இணைந்தார்
டெல்டாவின் மூத்த சமூக செயல்பாட்டாளரும், தமுமுக-வின் முன்னாள் தலைமைக் கழக பேச்சாளருமான பொதக்குடி.தாஜுதீன் அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆற்றல் மிகு பேச்சாளர், களப்பணியாளரான அவரது இணைவு திருவாரூர் மாவட்டத்தில் கட்சிக்கு வலு சேர்க்கும் என தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர் இந்தியாவிலும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் .தாஜுதீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக், மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தாகீர், பொதக்குடி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.