ஜூன்:13., ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் தலையாதது 1800 ல் நடைபெற்ற கோவை புரட்சியாகும். இதில் சாதி, மதம் கடந்து தமிழர்கள் போராடினர்கள். தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது சகோதரர்கள், முகம்மது ஹாசம், பரமத்தி அப்பாச்சி கவுண்டர் என பல தரப்பினரும் இணைந்து நடத்திய கூட்டு புரட்சியை பலரும் நினைவு கூறுவதில்லை. இதை மே 17 இயக்கம் ' வரலாற்று மீட்பு மாநாடு 'என்ற பெயரில் கோவையில் முன்னெடுத்து, அனைத்து சமூக மக்களையும் ஒன்று கூட்டி அரிய வரலாற்று பணியை செய்துள்ளது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது, கேரளா, கர்நாடகா, தமிழகம் என பல தென் பகுதி மக்கள் இணைந்த போராட்ட களம் இது என்றும், இது அன்றே உருவான திராவிட மாடல் என்றும் பேசினார். தமிழர்கள் ஒரு தாய் மக்களைப் போல நின்று போராடிய நிகழ்வு என்றும் கூறி, இதை சமகாலத்தில் நினைவூட்டிய மே 17 இயக்கத்தை பாராட்டினார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் தோழர் நவீன், உள்ளிட்டோர் சிறப்பாக பணிகளை ஒருங்கினைத்திருந்தனர். கோவையில் நல்லிணக்கத்திற்கும், மனித உரிமைகளுக்கும்
Month:
அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு… இது புல்டோசர் பயங்கரவாதம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
உலகம் எங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களில் முதன்மையானவர் JNU பல்கலைக்கழக மாணவர் தலைவர் அஃப்ரின் பாத்திமா ஆவார். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியதற்கு பழிவாங்கும் வகையில்,அவரின் வீட்டை உ.பி. மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்திருக்கிறது. சமீப காலமாக வலதுசாரி ஜனநாயக விரோத சக்திகள், தங்களை எதிர்க்கும் போராட்டவாதிகளின் குடியிருப்புகளை, புல்டோசர்கள் கொண்டு இடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இல்லங்களை இடிப்பதன் மூலம் போராடுபவர்களின் உள்ளங்களை ஒடுக்கலாம் என நினைக்கிறார்கள். உலக அளவில் மதிப்பிழந்து, நாட்டின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்திவரும் பாஜகவின் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யாவின் இச் செயல் ஒரு 'புல்டோசர் பயங்கரவாதம்' ஆகும். இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அஃப்ரீன் பாத்திமா போன்ற கருத்துரிமை போராளிகளின் பின்னால், நாட்டு மக்களின் மனசாட்சி உறுதியாக நிற்கிறது என்பதை ஃபாசிஸ சக்திகள் புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அழுத்தமாக
வாணியம்பாடி தொழிலதிபர் அஃபாக் இல்லத் திருமண விழா…!மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து.
திருப்பத்தூர். ஜூன்.11., திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் அஃபாக் அவர்களின் இல்லத் திருமண விழா வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இத்திருமண விழாவில் மஜக அவைத் தலைவர் நாசர் உமரி, அஜ்மீர் தர்கா தலைவர் காஜா சையத் கியாஸ்சுதீன், வாணியம்பாடி ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டி துணை ஒருங்கிணைப்பாளர் மன்சூர், மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்ட துணைச் செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல், துறைமுகம் சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம்
கன்னியாகுமரியில் மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஜூன்:09., நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகிய இருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஸரப் அலி, மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ஐயப்பன், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் சுரேஷ் காணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் தொல்காப்பியன், கோட்டாறு இளங்கடை டிரஸ்ட் தலைவர் செய்யது தாமீம், மற்றும் தோழமை கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று மதக்கலவரத்தை தூண்டும் நுபுர் சர்மா, நவின் ஜிண்டால் போன்றவர்களை கைது செய்யாமல் பாதுகாத்து வரும் ஒன்றிய பாசிச அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில்
மஜக கோவை மாவட்ட தலைமையகத்திற்கு திருமுருகன்காந்தி வருகை!
கோவை. ஜூன்:08., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைமையகத்திற்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அவர்கள் வருகை தந்து வருகின்ற ஜூன் 12ல் நடைபெறவுள்ள "கோவை மறந்த விடுதலை போர் வரலாற்று மீட்பு மாநாடு" அழைப்பிதழை வழங்கினார். அவருக்கு மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் புத்தகம் வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, Ikp மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் M.சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, ஜாபர்சாதிக், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், குறிச்சிப்பிரிவு கிளை செயலாளர் அப்துல் சலாம், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 08.06.2022