கோவை. ஜூன்:08., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைமையகத்திற்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அவர்கள் வருகை தந்து வருகின்ற ஜூன் 12ல் நடைபெறவுள்ள “கோவை மறந்த விடுதலை போர் வரலாற்று மீட்பு மாநாடு” அழைப்பிதழை வழங்கினார்.
அவருக்கு மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் புத்தகம் வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, Ikp மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் M.சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, ஜாபர்சாதிக், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், குறிச்சிப்பிரிவு கிளை செயலாளர் அப்துல் சலாம், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
08.06.2022