அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு… இது புல்டோசர் பயங்கரவாதம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!

உலகம் எங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களில் முதன்மையானவர் JNU பல்கலைக்கழக மாணவர் தலைவர் அஃப்ரின் பாத்திமா ஆவார்.

ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியதற்கு பழிவாங்கும் வகையில்,அவரின் வீட்டை உ.பி. மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்திருக்கிறது.

சமீப காலமாக வலதுசாரி ஜனநாயக விரோத சக்திகள், தங்களை எதிர்க்கும் போராட்டவாதிகளின் குடியிருப்புகளை, புல்டோசர்கள் கொண்டு இடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இல்லங்களை இடிப்பதன் மூலம் போராடுபவர்களின் உள்ளங்களை ஒடுக்கலாம் என நினைக்கிறார்கள்.

உலக அளவில் மதிப்பிழந்து, நாட்டின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்திவரும் பாஜகவின் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யாவின் இச் செயல் ஒரு ‘புல்டோசர் பயங்கரவாதம்’ ஆகும்.

இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

அஃப்ரீன் பாத்திமா போன்ற கருத்துரிமை போராளிகளின் பின்னால், நாட்டு மக்களின் மனசாட்சி உறுதியாக நிற்கிறது என்பதை ஃபாசிஸ சக்திகள் புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
13.06.2022