கோவை புரட்சி 1800.. அன்றே உருவான திராவிட மாடல்!மே-17 இயக்க மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஜூன்:13., ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் தலையாதது 1800 ல் நடைபெற்ற கோவை புரட்சியாகும்.

இதில் சாதி, மதம் கடந்து தமிழர்கள் போராடினர்கள்.

தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது சகோதரர்கள், முகம்மது ஹாசம், பரமத்தி அப்பாச்சி கவுண்டர் என பல தரப்பினரும் இணைந்து நடத்திய கூட்டு புரட்சியை பலரும் நினைவு கூறுவதில்லை.

இதை மே 17 இயக்கம் ‘ வரலாற்று மீட்பு மாநாடு ‘என்ற பெயரில் கோவையில் முன்னெடுத்து, அனைத்து சமூக மக்களையும் ஒன்று கூட்டி அரிய வரலாற்று பணியை செய்துள்ளது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது, கேரளா, கர்நாடகா, தமிழகம் என பல தென் பகுதி மக்கள் இணைந்த போராட்ட களம் இது என்றும், இது அன்றே உருவான திராவிட மாடல் என்றும் பேசினார்.

தமிழர்கள் ஒரு தாய் மக்களைப் போல நின்று போராடிய நிகழ்வு என்றும் கூறி, இதை சமகாலத்தில் நினைவூட்டிய மே 17 இயக்கத்தை பாராட்டினார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் தோழர் நவீன், உள்ளிட்டோர் சிறப்பாக பணிகளை ஒருங்கினைத்திருந்தனர்.

கோவையில் நல்லிணக்கத்திற்கும், மனித உரிமைகளுக்கும் சேவையாற்றியவர்களும், கலை – இலக்கிய படைப்பாளிகளுக்கும் விருதளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

மதிமுக தலைவர் வைகோ, CPI செயலாளர் முத்தரசன், CPM முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், த.பெ.தி.க. தலைவர் கோவை ராமகிருஷ்ணன், த.கொ.இ.பே தலைவர் தனியரசு , விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

நிகழ்வில் மஜக மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநிலச் செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, ஜாபர் சாதிக், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12.06.2022