நாகர்கோவிலில்!! MJTS சார்பில் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா!!

ஜூன்:13., கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS சார்பில் நாகர் கோவிலில் புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா நிகழ்ச்சி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகமது ராபி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அமீர்கான், மாநகரச் செயலாளர் மாகீன் இப்ராகிம், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர் செய்யது முகம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் காயல் A.R.சாகுல் ஹமீது அவர்கள் பங்கேற்று தொழிற்சங்க கொடியேற்றி புதிய ஆட்டோ நிறுத்தத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பாத்திமா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஹிமாம் பாதுஷா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் தொழிற்சங்க நகரச் செயலாளர் சேக் முகமது, அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்..

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
12.06.2022