ஜூன்:20., மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் இரத்த வங்கிக்கு, 60 லட்சம் மதிப்புள்ள ரத்த அணுக்கள் பிரிக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இரத்ததான சேவையில் ஈடுபட்ட சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா, அவர்கள் கலந்து கொண்டு , மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணிக்கு சிறந்த ரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழை மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அசார், அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மஜக மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, மாவட்ட பொருளாளர் சதாம், துணைச் செயலாளர் ஜாஃபர், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 20.06.2022
Month:
நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து..! நெல்லையில் மஜக ஆர்ப்பாட்டம்…!!
ஜூன்.20., "நபிகள் நாயகம்" (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் அதை அமோதித்து சமூக வலைதளத்தில் எழுதிய நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்து. நெல்லை மாவட்டம், பேட்டையில், முனிசிபல் பேருந்து நிறுத்தத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. CPI மாவட்ட செயலாளர் தோழர் காசிவிஸ்வநாதன், விசிக மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், IUML தென்மண்டல் இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது கடாபி, தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் நெல்லைதமிழரசு, மதிமுக நெல்லை பகுதி செயலாளர் கோல்டன்கான், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் திருகுமரன், தமிழர் உரிமை மீட்புகளம் ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் கென்னடி, RP மக்கள் நல அமைப்பு தலைவர் சேவத்தா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இக்கூட்டத்தில் மஜக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மன்சூர்அலி, மாவட்ட நிர்வாகிகள் N.அப்பாஸ், புகாரி, முருகேசன், நெல்லை ஜாகிர், டில்லி சம்சுதீன் மற்றும் பகுதி, நகரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்டனத்தை பதிவுசெய்தனர். மஜக பேட்டை நகர செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 19.06.2022
நீலகிரியில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்..
ஜூன் :19., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக, நீலகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் T. கமாலுதீன் ,மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி,முன்னிலையில் திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டணர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை,மற்றும் கட்சியின் பணிகள், நிர்வாக கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் அதிப் , மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் T.ரிஸ்வான்,மனிதஉரிமை கழகத்தின் மாவட்டச் செயலாளர் தப்ரேஸ் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரி-கிழக்கு_மாவட்டம் 18.06.2022
செப் 10 முற்றுகை…. தோப்புத்துறையில் சுவர் விளம்பர பணிகள் மும்முரம்..
ஜூன்:18, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை , சாதி, மத, வழக்கு பேதமின்றி, பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி கடந்த 7 ஆண்டுகளாக குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது இந்நிலையில் எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, இவர்களுக்கு முன் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை மஜக வலியுறுத்தி வருகிறது இதை முன்னிட்டு செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான சுவர் விளம்பர பணிகள் வரையப்பட்டு வருகிறது நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. இவ்வாரம் வேதாரண்யம் தொகுதி முழுக்க சுவர் விளம்பர பணிகள் நிறைவடையும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 18.06.2022
கன்னியாகுமரியில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்..
ஜூன் :18., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக, கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தில் மாவட்ட துணை செயலாளர் அமீர்கான், அவர்கள் தலைமையில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி அவர்களின் முன்னிலையில் திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் உரையாற்றி உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரஹ்மான் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கே எஸ் ரபீக், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத், மாநகரச் செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கன்னியாகுமரி_மாவட்டம் 17.06.2022