செப் 10 முற்றுகை…. தோப்புத்துறையில் சுவர் விளம்பர பணிகள் மும்முரம்..

ஜூன்:18,

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை , சாதி, மத, வழக்கு பேதமின்றி, பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி கடந்த 7 ஆண்டுகளாக குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது

இந்நிலையில் எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, இவர்களுக்கு முன் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை மஜக வலியுறுத்தி வருகிறது

இதை முன்னிட்டு செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கான சுவர் விளம்பர பணிகள் வரையப்பட்டு வருகிறது

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. இவ்வாரம் வேதாரண்யம் தொகுதி முழுக்க சுவர் விளம்பர பணிகள் நிறைவடையும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
18.06.2022