ஜூன்:27., நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி அரியலூரில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் காதர் பாஷா, அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முகமது அலி, ஷேக் இஸ்மாயில், சையது அலி, மாவட்ட பொருளாளர் ஷர்புதீன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் செய்யது பாருக்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் ராஷித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், ஒன்றிய செயலாளர் யாஹீன் கான்,நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர் தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #அரியலூர்_மாவட்டம் 25.06.2022
Month:
2002-குஜராத் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை போராளி தீஸ்தா செடில் வாட்
2002-குஜராத் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை போராளி தீஸ்தா செடில் வாட் அவரையும், உன்மைக்கு துணை நின்ற முன்னாள் குஜராத் DGP ஸ்ரீ குமாரையும் கைது செய்துள்ளது குஜராத் காவல் துறை. கலவரத்தை நடத்தியவர்கள் அதிகாரத்தில்...? இவர்கள்? நீதியகமும், ஜனநாயகமும் எங்கே செல்கிறது? https://t.co/H1qPu5wFLj
மஜக திருப்பூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்! துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாரூக் மாநில செயலாளர் ஜாபர் அலி பங்கேற்பு!
ஜூன்:27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாரூக், மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி, ஆகியோர் பங்கேற்று நிர்வாக கட்டமைப்பு, கிளை விரிவாக்கம், செப்10 தலைமைச் செயலக முற்றுகை முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, சேக் ஒளி, இளைஞரணி மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் முத்தஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் மங்களம் காதர், மற்றும் மாநகர , ஒன்றிய ,கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_வடக்கு_மாவட்டம் 24.6.2022
முத்துப்பேட்டை அல்மஹா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா..!! மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்..!!
ஜூன்:26.., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இயங்கிவரும் அல்மஹா அறக்கட்டளையின் பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவும் TVS கார்கோ & டிராவல்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிகளை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு விழாவும் மேலும் சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள் என்ற புத்த வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு, A.X.அலெக்ஸாண்டர் IPS அவர்களும், திருக்குறள் ஆய்வு கழக நிறுவனர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா M.A.,M.Ed.,Ph.D., அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். TVS ஹைதர் அவர்கள் மாணவிகளுக்கு பட்டங்களையும், ஊழியர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார் புத்தகத்தின் முதல் பிரதியை முத்துப்பேட்டை புதுப்பள்ளி பெண்கள் மதரஸா முதல்வர் A.இப்ராஹிம் அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். முன்னதாக அல்மஹா குரூப் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர்
நீட் TNPSC பயிற்சி வகுப்பு! ஊழல் பெருகிவிட்ட நிர்வாக அமைப்பில் நியாயமாக செயல்படுங்கள்! சேலம் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
ஜூன்:26., சேலத்தில் ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் NEET மற்றும் TNPSC தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் பயிற்சி மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு... இங்கு ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆக்கப்பூர்வமான ஒரு பணியை, தூர நோக்கோடு முன்னெடுத்து வருவதற்காக எனது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கல்வி ஆர்வலர்கள் , ஜமாத்தினர் என ஒரு கூட்டு முயற்சியோடு இந்த பயிற்சி மையம் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறுவது சிறப்பானது. இதில் சாதி, மதம் பாராமல் எல்லா சமூக பிள்ளைகளுக்கும், கட்டண மின்றி பயிற்சியளிக்கப்படுவது ஒரு சிறப்பாகும். வசதியற்றவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக உள்ளது என்பதில் ஐயமில்லை. நீட் தேர்வு இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்கிறோம். அது நம் உறுதியான கொள்கை. ஆனால் அது திணிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் போது, அதை உரிய வகையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இலவசமாக இங்கு பயிற்சியளிக்கப்படுவது பாராட்டத்தக்கது. ஜாமியா என்றால்